வைகோ துணிக் கடை வச்சிருக்கார் போல.. வியாபாரம் ஆகாத துணிகளால் கருப்பு கொடி காட்டுகிறார்- எஸ் வி சேகர்
திண்டுக்கல்: வைகோ ஏதேனும் துணிக்கடை வைத்திருப்பார். அங்கு விற்பனை ஆகாத துணிகளை கருப்புக்கொடி காட்டுவதற்காக பயன்படுத்தி வருகிறார் என்று எஸ்வி சேகர் பழனியில் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயில் சாமி தரிசனம் செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி.சேகர் கூறியதாவது.: தமிழகத்தில் அதிக வருமானம் வரக்கூடிய கோயில்களில் முதன்மையானது பழனி மலைக் கோவிலாகும்.
அதேபோல் ஆக்கிரமிப்பும் அதிகமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் கடவுள் இல்லை எனக் கூறும் கட்சிகள் தென் தமிழகத்தில் குலதெய்வ வழிபாடு செய்யும் மக்களிடம் சென்று கடவுள் இல்லை என கூறிவிட்டு திரும்ப வரமுடியுமா?

சொகுசு காரில்
இந்து மதத்தை பழித்து அரசியல் செய்யும் எந்த கட்சிக்கும் வாக்களிக்கக் கூடாது. மேலும், கம்யூனிஸ்டுகள் உண்டியல் குலுக்கி மக்கள் பணி ஆற்றிய காலம் போய், தற்போது சொகுசு காரில் வந்துசெல்லும் அளவு வசதி எப்படி வந்தது?

இடைத்தேர்தல்
அவர்களும் காசுபண்ண தெரிந்த சராசரி அரசியல்வாதிகளாக மாறிவிட்டனர். திருவாரூர் இடைத்தேர்தல் தள்ளிவைக்க வேண்டும் என்று சொல்லும் மற்ற கட்சிகளின் கருத்தை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட மக்களுக்கு, தற்போது கிடைக்க வேண்டிய நிவாரணங்கள் இடைத்தேர்தல் காரணமாக கிடைக்கப் பெறாமல் போகும் வாய்ப்பு உள்ளது.

பயன்படுத்துதல்
தேர்தலை தள்ளிவைப்பதில் தவறில்லை. மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக்கொடி காட்ட போவதாக அறிவித்திருக்கும் வைகோவின் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது. வைகோ ஏதேனும் துணிக்கடை வைத்திருப்பார். அங்கு விற்பனை ஆகாத துணிகளை கருப்புக்கொடி காட்டுவதற்காக பயன்படுத்தி வருகிறார்.

சாதகம்
கேரள முதல்வர் பினராய் விஜயன் செய்துவரும் அரசியல் மிகவும் கீழ்த்தரமான அரசியல், மதவெறி அரசியல். மேலும் கேரளாவில் நடைபெற்று வரும் ஆட்சியானது கிறிஸ்தவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது.

விமான நிலையம்
இரண்டு கிறிஸ்தவ ஆலயங்கள் இடையே நடைபெற்று வரும் பிரச்சினைகள் சுமூகமாக தீர்க்காமல் சபரிமலை பிரச்சனை மட்டும் ஏன் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். கேரளாவில் விமான நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட இடம் ஒரு கிறிஸ்தவ சபைக்கு சொந்தமான இடம்.

சாதகம்
அந்த கிறிஸ்தவ அமைப்பினரிடமிருந்து ரூ.50,000 கோடி கேரள முதல்வர் பினராய் விஜயன் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு சாதகமாக குரலெழுப்பி வருகிறார் என்று எஸ் வி சேகர் தெரிவித்தார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications