50 வயசு சார் அந்தாளுக்கு.. ஏழைப்பெண்ணை ஏமாற்றி விட்ட கும்பல்! ஏற்கனவே 6 கல்யாணம் ஆயிருச்சாமே! ஷாக்!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஏழை பெண்ணின் வறுமையை பயன்படுத்தி அவருக்கு ஆசை வார்த்தை கூறி 50 வயதுடைய நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளது ஒரு கும்பல். இதற்காக பல லட்சம் ரூபாயை கமிஷனாக பெற்ற நிலையில் தப்பி வந்த பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் அந்த நபருக்கு ஏற்கனவே பலமுறை திருமணம் நடந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மோசடி மன்னன் குறித்தும், புரோக்கர் கும்பல் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண்ணுக்கு தாய் இல்லை. தந்தை மற்றும் தங்கை உள்ளனர். அவருக்கு திருமணமாகாத நிலையில் அவரது, தங்கைக்கு திருமணமாகி குழந்தை உள்ளது.

ஏழைப் பெண்
ஆனால் 23 வயதாகியும் திருமணம் நடக்காததால் தனது தங்கை வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில், பொன்நகரத்தை சேர்ந்த முருகேஸ்வரி என்பவர் அவருக்கு பழக்கமானார். இளம்பெண்ணின் ஏழ்மையை பயன்படுத்தி தனக்கு தெரிந்த செல்வந்தர் திருச்சியில் இருப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொண்டால் வசதியாக வாழலாம். உன் குடும்பத்தையும் கவனித்துக் கொள்வார் என ஆசை வார்த்தை கூறி உள்ளார்.
திருமண கும்பல் மோசடி
ஏற்கனவே வறுமையில் இருந்த அவர் தனக்கு திருமணம் ஆவதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார். இது குறித்து உனது தந்தை மற்றும் தங்கையிடம் சொல்ல வேண்டாம். முதலில் திருமணம் செய்து கொண்டு அதன்பிறகு சம்மதம் வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்தார். இதனையடுத்து கடந்த 6ஆம் தேதி காலை 5.30 மணி அளவில் திண்டுக்கல் நிலையத்தில் திருச்சிக்கு ரயிலில் அழைத்து சென்றார். திருச்சியில் மிகவும் பிரபலமான உணவகத்தில் சாப்பிட்டு விட்டு கரூர் மாவட்டம் பேட்டைவாய்த்தலை நகரில் உள்ள ஒரு லாட்ஜில் முருகேஸ்வரி மற்றும் மேலும் 2 பேர் தங்கினர்.
50 வயது மணமகன்
மற்றொரு அறையில் மணமகன் மற்றும் அவரது நண்பர்கள் தங்கி இருந்தனர். மறுநாள் காலையில் திருமணம் நடக்க இருப்பதாக அவர்கள் கூறினர். அதனை நம்பி அவர்கள் வாங்கிக்கொடுத்த புடவையை கட்டிக்கொண்டு அங்குள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு மணமகனை பார்த்ததும் அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சுமார் 50 வயது மதிக்கத்தக்க மாரியப்பன் என்பவர் இளம்பெண்ணுக்கு தாலி கட்டியுள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகப்பட்ட இளம்பெண் இது குறித்து தன்னை அழைத்து வந்த முருகேஸ்வரியிடம் கேட்டபோது திருமணம் முடிந்து விட்டது. இனிமேல் எதுவும் பேசக்கூடாது என கூறி உள்ளார்.
மணப்பெண் விற்பனை
அப்போதுதான் தன்னை திருமணம் என்ற போர்வையில் மாரியப்பனுக்கு விலைபேசி விற்று விட்டது தெரிய வந்துள்ளது. இதற்காக மாரியப்பனிடம் இருந்து பல லட்சம் ரூபாயை கமிஷனாக வாங்கி உள்ளனர். அந்த கமிஷன் தொகையை பங்கு பிரிப்பதில் முருகேஸ்வரி மற்றும் அவருடன் வந்தவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் இதன தனது ஊரில் உள்ள தங்கைக்கு போன் செய்துள்ளார். மாலையில் மணமகன் வீட்டிற்கு செல்லலாம் என அவர்கள் கூறியபோது இனிமேலும் இங்கிருந்தால் ஆபத்து என நினைத்த அவர் அங்கிருந்து தப்பி திண்டுக்கல் வந்தார்.
6வது திருமணம்
இதனால் அதிர்ச்சி அடைந்த மாரியப்பன் மற்றும் அவரது அடியாட்கள் இளம்பெண் வீட்டிற்கு வந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் போலீசில் புகார் அளிக்கவே அவர்கள் திரும்பி சென்றனர். இது குறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். தனது புகாரில், எனது ஏழ்மை மற்றும் அறியாமையை பயன்படுத்தி திருச்சியை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு 6-வது திருமணம் செய்து வைத்துள்ளனர். அவர் என்னைப்போன்ற ஏழ்மையான பெண்களை திருமணம் செய்து வசதி படைத்தவர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.
நிலக்கோட்டை போலீஸ்
அவர் பல்வேறு ஊர்களில் புரோக்கர்களை நியமித்து அவர்களுக்கு கமிஷன் கொடுத்து இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வருகிறார். எனவே மாரியப்பன் மற்றும் அவருக்கு உடந்தையாக உள்ள புரோக்கர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறியுள்ளார். புகாரின் பேரில் நிலக்கோட்டை டி.எஸ்.பி. விசாரணை நடத்த மாவட்ட எஸ்.பி. பிரதீப் உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணையின் முடிவில் பல திடுக்கிடும். தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்












Click it and Unblock the Notifications