எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாத்தியா? மாற்றுத்திறனாளியை ஆற்றில் சிக்க வைத்த கூகுள் மேப்! எங்கே?
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேபட்டிவீரன்பட்டியில் கூகுள் மேப் பார்த்து வழி தவறி சென்று 5 மணி நேரமாக ஆற்று சகதியில் சிக்கிய கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தரை நள்ளிரவில் போலீசார் பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து பக்தரை மீட்ட தமிழக போலீசாருக்கு கர்நாடக போலீசார் பாராட்டியுள்ளனர்.
உலகளவில் இணைய சேவைகளை வழங்கி வரும் கூகுள் நிறுவனத்தின் சார்பில் கடந்த 2008ஆம் கூகுள் மேப் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் வாகன பயணம் மேற்கொள்ளும் மக்கள் தங்கள் செல்லவேண்டிய இடத்திற்கான பகுதியை குறிப்பிட்டால் போதும் கூகுள் மேப் பாதையை துல்லியமாக கணிக்கும்.

மேலும் எங்கெங்கு போக்குவரத்து நெரிசல் உள்ளது எங்கெங்கு வேகமாக செல்லலாம் உள்ளிட்ட வசதிகளையும் கூகுள் மேப் வழங்குகிறது. இதனால் இதுவரை செல்லாத பகுதிகளுக்குக் கூட யாரும் உதவி கேட்காமலேயே எங்கு வேண்டுமானாலும் சென்று வந்துவிடலாம்.
மேலும் அந்த வழியில் உள்ள பெட்ரோல் பங்குகள் உணவகங்கள் உள்ளிட்ட வசதிகளையும் கூகுள் மேப் தங்கள் பயனாளிகளுக்கு வழங்கி வருகிறது. தற்போது கூகுள் எர்த், கூகுள் ஸ்ட்ரீட் வ்யூ என பல மேம்பட்ட அம்சங்களுடன் கூகுள் மேப் சேவையானது செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சில குறைபாடுகளும் கூகுள் மேப்பில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் கூகுள் மேப் வசதியுடன் காரை இயக்கிய ஓட்டுனர் செல்ல முயன்றபோது அங்கு தோண்டப்பட்ட குழியில் விழுந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கேரள மாநிலம் கண்ணூரில் கூகுள் மேப் பார்த்து இயக்கப்பட்ட நாடகக் குழுவினர் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் திண்டுக்கல்லில் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. கூகுள் மேப் பார்த்தபடி இருசக்கர வாகனத்தில் சென்ற மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தர் 5 மணி நேரமாக ஆற்றுக்குள் சகதியில் சிக்கிய நிலையில் அவரை தமிழ்நாடு போலீசார் மீட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம், மங்களூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தர் பரசுராமா. 30 வயtஹான இவர் மாற்றுத்திறனாளிகள் ஓட்டிச் செல்லக்கூடிய தனது மூன்று சக்கர வாகனத்தில் (ஸ்கூட்டி) கர்நாடக மாநிலத்தில் இருந்து, திண்டுக்கல் வத்தலகுண்டு வழியாக சபரிமலை ஐயப்பன் கோவில் சென்றுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு, தனி ஒருவனாக மீண்டும் கர்நாடகா கிளம்பி உள்ளார்.
கூகுள் மேப் பார்த்தபடி வத்தலகுண்டு வழியாக சென்றபோது, இரவில் வழி தவறி வத்தலகுண்டு அடுத்த, பட்டிவீரன்பட்டி அருகே ஆற்றில் சகதியில் சிக்கிக் கொண்டார். இரவு 8 மணியிலிருந்து நள்ளிரவு ஒரு மணி வரை வழி தெரியாமல் சகதியில் சிக்கிக் கொண்டு மெயின் ரோட்டிற்கு வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். இதுகுறித்து மாற்றுத்திறனாளியான ஐயப்ப பக்தர் பரசுராமா, கர்நாடக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா போலீசார் கொடுத்த தகவலின் பேரில், தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி வத்தலகுண்டு காவல் நிலைய இரவு ரோந்து காவலர்கள் நள்ளிரவில், ஆற்றுப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேடி அலைந்து அவர் இருந்த இடத்தை கண்டுபிடித்து பத்திரமாக மீட்டு பட்டிவீரன்பட்டி காவல் நிலையம் அழைத்துச்சென்று, அவருக்கு உணவு வழங்கி உபசரித்தனர்.
இந்த தகவல் தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கர்நாடக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆற்று சகதியில் சிக்கிய மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தரை பத்திரமாக மீட்ட தமிழ்நாடு போலீசாரை கர்நாடக போலீசார் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications