ஜாக்பாட்.. அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை! அமைச்சர் சொன்ன ஹாப்பி நியூஸ்! எப்போது விண்ணப்பம்?
திண்டுக்கல்: மகளிர் உரிமைத் தொகை கிடைக்க பெறாத மீதம் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் அதற்கான விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது எனவும், இனி தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமை கண்டிப்பாக வரும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சுமார் ஒரு கோடியே 16 லட்சம் பயனாளிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
மேலும் புதிதாக திருமணமானவர்கள், புதிய குடும்ப அட்டை பெற்றவர்கள், கல்லூரி படிப்பை முடித்தவர்கள் என மாதம் தோறும் ஆயிரக்கணக்கில் மகளிர் உரிமைத்தொகைக்காக புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான பட்டியல் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதிதாக திருமணமானவர்கள், புதியதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள், பெயர் நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் மேல் முறையீடு செய்தவர்கள் என மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை விரைவில் புதுப்பிக்கப்பட இருக்கிறது. புதிய பயனர்கள் இணைப்பு தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்தவர்களுக்கு இன்னும் மூன்று மாத காலத்தில் விண்ணப்பம் பெறப்பட்டு தகுதியுடைய அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார்
இதனால் புதிய விண்ணப்பங்கள் எப்போது முதல் பெறப்படும் என்ற அறிவிப்புக்காக மக்கள் காத்திருந்தனர்.
இதற்கிடையே இனி தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமை கண்டிப்பாக வரும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே சேவுகம்பட்டி பேரூர் திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்று சிறப்புரையாற்றினார்
கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது," தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பொற்கால ஆட்சியில் தொடரும் சாதனைகளாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்க பெறாத மீதம் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் அதற்கான விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது. இனி தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமை கண்டிப்பாக வரும்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர், அன்னை சோனியா காந்தி ஆகியோர்களால் கொண்டுவரப்பட்ட ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒன்றிய அரசு முற்றிலும் நிறுத்திடுவதற்கான சதி செயலில் ஈடுபடுகிறது. அதற்காக 40 கோடியாக இருந்த வேலை நாட்களை தற்போது 12 கோடி வேலை நாட்களாக ஒன்றிய அரசு குறைத்து உள்ளது. தமிழக உரிமைகளை மீட்டிட நல்லாட்சி தொடர்ந்திட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைவரும் ஆதரிக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications