காய்ச்சலால் பறிபோன உயிர்..இறந்தும் வாழ்வளித்த சிறுவன்! அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்..கடைசி வீடியோ!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது. இதனையடுத்து சிறுவனின் உடலுக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மரியாதை செலுத்தினார். இந்நிலையில் உடல் தானத்துக்கு முன் சிறுவனின் உடல் கொண்டு செல்லப்பட்ட வீடியோவும், பெற்றோர் கதறி அழுத காட்சிகளும் காண்போரை கண்கலங்க வைக்கும் வகையில் இருந்தது.
திண்டுக்கல் அருகே உள்ள நடுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் இரண்டு மகன்கள் உள்ளனர் .

இதில் இளைய மகன் கிஷோர், வயது 11. இவர் மா.மூ கோவிலூர் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். இவருக்கு சில தினங்களாக காய்ச்சல் இருந்து வந்து உள்ளது. இந்நிலையில் கிஷோர் காய்ச்சல் அதிகமாக சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் அவருக்கு காய்ச்சல் அதிகமானதால் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூளைச் சாவு அடைந்துள்ளார். இதனை அடுத்து தனியார் மருத்துவமனையில் இருந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கிஷோரின் உடலை உடல் தானம் கொடுக்க வருகை தந்து உள்ளனர்.
கிஷோரின் உடலை சென்னை மற்றும் மதுரையிலிருந்து வந்த சிறப்பு மருத்துவர்கள் உடல் கூறு ஆய்வு செய்தனர். இந்த நிலையில் உடல் தான நடவடிக்கைகள் முடிந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பாலு தேவா வெளியே கொண்டு வரப்பட்ட 11 வயது சிறுவனின் உடலுக்கு அரசு மருத்துவமனை முதல்வர் சுகந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இது குறித்து திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் சுகந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், தனியார் மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த 11 வயது சிறுவன் கிஷோர் என்பவரின் உடல் உறுப்பை தானம் செய்வதற்காக அவரது பெற்றோர்கள் முன்வந்தனர். இதனை அடுத்து கிஷோரின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.
சென்னை தனியார் மருத்துவமனையில் இருந்து சிறுவனின் இருதயத்தை எடுத்து செல்வதற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர் குழுவினர் வருகை தந்தனர். இந்த நிலையில் நோய் தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தின் பெயரில் அவர்கள் இருதயத்தை எடுத்துச் செல்லவில்லை. மதுரையிலிருந்து தனியார் மருத்துவமனையில் இருந்து வருகை தந்த மருத்துவர் குழுவினர் கிஷோரின் தோல்களை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர்.
உடல் உறுப்பு தானங்களில் சிறந்த தானம் தோல் தானம். தோல் தானம் வழங்கிய கிஷோரின் பெற்றோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். சென்னை தனியார் மருத்துவக் குழு உறுப்பினர் இதயத்தை ஏன் எடுத்துச் செல்லவில்லை என்ற கேள்விக்கு.. இதுகுறித்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் இருந்து வருகை தந்த மருத்துவ குழுவினர் ஏன் இதயத்தை எடுத்துச் செல்லவில்லை என்ற காரணத்தை முறையாக தெரிவிக்கவில்லை.
வைரஸ் பாதிப்பு இருக்கலாமா என்ற காரணத்தினால் அவர்கள் இதயத்தை எடுத்துச் செல்லாமல் இருக்கலாம்" என தெரிவித்தார். இதனை அடுத்து சிறுவனின் உடல் அவனின் சொந்த ஊரான பெரிய கோட்டை நடுப்பட்டி கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு வைக்கப்பட்ட சிறுவனின் உடலுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அரசு சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் உடல் தானத்திற்கு முன்னதாக சிறுவன் மருத்துவ உபகரணங்களோடு எடுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications