திருப்பதிக்கே டஃப் கொடுப்பார் போலயே நம்ம பழனியாண்டவர்! எடுக்க எடுக்க தங்கம்.. மொத்த இத்தனை கோடியா?
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அருள்மிகு பழநி தண்டாயுதபாணி சுவாமி மலை கோயிலில் இன்று நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரொக்கமாக 2 கோடியே 78 லட்சத்து ஓராயிரத்து 835 ரூபாயை பக்தர்கள் கணிக்கையாக செலுத்தியுள்ளனர். மேலும் தங்கமாக 953 கிராம், வெள்ளியாக 20,575 கிராம், வெளிநாட்டு கரன்சி 2085 நோட்டுகளும் கிடைக்கப் பெற்றன.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவர்.

ஒரு நாளைக்கு 50 ஆயிரம் முதல் பக்தர்கள் வரும் நிலையில் திருவிழா காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டு முருகப்பெருமானை தரிசிக்க வருவது வழக்கம். இந்த நிலையில் தற்போது வைகாசி மாதம் மற்றும் முகூர்த்த தினங்கள் காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்துக் காணப்படுகிறது.
பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் தங்களது காணிக்கை செலுத்துவது வழக்கம் பணம், தங்க வெள்ளி நகைகள் அமெரிக்க டாலர்கள் என பல்வேறு வகையான காணிக்கைகளை பாகதர்கள் செலுத்துவார்கள். இதற்காக கோவில் வளாகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை செலுத்துவர்.
இந்த பணமானது மாதம் ஒருநாள் எண்ணப்படுவது வழக்கம். திருக்கோயில் வளாகத்தில் கல்லூரி மாணவர்கள் தன்னார்வலர்கள் வங்கி ஊழியர்கள் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் இந்த மாதம் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலை மீது நடைபெற்றது. உண்டியல் எண்ணிக்கையில் வங்கி ஊழியர்கள், கோயில் ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், கல்லூரி பேராசியர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பழநி மலை கோயிலில் இன்று நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரொக்கமாக 2 கோடியே 78 லட்சத்து ஓராயிரத்து 835 ரூபாயை பக்தர்கள் கணிக்கையாக செலுத்தியுள்ளனர். மேலும் தங்கமாக 953 கிராம், வெள்ளியாக 20,575 கிராம், வெளிநாட்டு கரன்சி 2085 நோட்டுகளும் கிடைக்கப் பெற்றன. வரும் மாதங்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் காணிக்கை தொகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications