அள்ள அள்ள தங்கம்.. பழனி முருகன் கோவில் உண்டியலை திறந்தால்.. கொட்டிய கோடிகள்
திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். அவர்கள் கோவிலில் உள்ள உண்டியலில் பணம், நகை போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். காணிக்கை பணம் ஒவ்வொரு மாதமும் எண்ணப்படும். அப்படி எண்ணப்பட்டது. இதில் கடந்த மாதம் பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.5.75 கோடி கிடைத்தது.
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். பழனி மலை முருகன் சிலை உலகிலேயே தனித்துவமானதாக பார்க்கப்படுகிறது. இது கல்லால் ஆனது அல்ல; போகர் என்ற சித்தரால் 9 வகையான விஷப் பொருட்களை (நவபாஷாணங்கள்) கலந்து செய்யப்பட்ட ஒரு ரசாயனக் கலவையாகும். இந்தச் சிலையிலிருந்து வழியும் அபிஷேகப் பொருட்கள் (பால், பஞ்சாமிர்தம்) மருத்துவக் குணம் கொண்டதாக நம்பப்படுகிறது.

பொதுவாகக் கோவில்களில் தெய்வங்கள் கிழக்கு நோக்கித்தான் இருக்கும். ஆனால், பழனி தண்டாயுதபாணி மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார். சேர நாட்டை (கேரளா) பார்த்தபடி அவர் அமர்ந்திருப்பதாக ஒரு ஐதீகம் இருக்கிறது. அதனால்தான் கேரளாவிலிருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகிறார்கள். தமிழ்நாடு, கேரளாவில் இருந்து மட்டுமின்றி, உலகம் முழுவதில் இருந்தும் முருக பக்தர்கள் அதிக அளவில் பழனிக்கு வருகிறார்கள். சபரிமலை சீசனில் ஐயப்பனை பார்க்கவரும் பக்தர்கள் பழனிக்கு செல்ல மறப்பது இல்லை. அந்த அளவிற்கு பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
அவ்வாறு வரும் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். மேலும் கோவிலில் உள்ள உண்டியலில் பணம், நகை போன்றவற்றை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம் கோவில் சார்பில் எண்ணி அளவிடப்படுகிறது. அதன்படி பழனி முருகன் கோவிலில் கடந்த மாதம் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அப்போது ரூ.3 கோடியே 59 லட்சத்து 98 ஆயிரத்து 486. தங்கம் 524 கிராம், வெள்ளி 14003 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 578-ம் கிடைத்தது.
இந்நிலையில் நேற்று 2-வது நாளாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் கோவில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள், கல்லூரி மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
இந்த உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 20 லட்சத்து 87 ஆயிரத்து 687-ம், தங்கம் 171 கிராம், வெள்ளி 3,976 கிராம், வெளிநாட்டு கரன்சி 263-ம் கிடைத்தது. 2 நாட்கள் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் நிறைவு பெற்றது. அதில் மொத்தம் ரூ.5 கோடியே 80 லட்சத்து 86 ஆயிரத்து 173-ம், தங்கம் 695 கிராம், வெள்ளி 17,979 கிராம், வெளிநாட்டு கரன்சி 841-ம் கிடைத்தது.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications