Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திகைக்க வைத்த திருப்பதி லட்டு! தமிழ்நாட்டுக்கே வரும் ஆந்திர எஸ்ஐடி..இன்று ஏஆர் டெய்ரி ஆலையில் சோதனை?

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் : திருப்பதி ஏழுமலையான் கோவிலிக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட வழங்கப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சை பக்தர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று திண்டுக்கல் ஏஆர் டெய்ரி ஆலையில் சோதனை நடத்தவுள்ளனர்.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யில், பன்றிக் கொழுப்பு, மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

tirupati laddu andhra pradesh ar dairy

இது தொடர்பாக பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ஆட்சி காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் உபயோகப்பட்டு இருக்கிறது. இது மிகப்பெரிய அபச்சாரம் என கூறியிருந்தார்.

அவரது குற்றச்சாட்டை அடுத்து பல இந்து அமைப்புகள், திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள், பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராகவும், தேவஸ்தான நிர்வாகத்திற்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்திருக்கிறது.

இந்த நிலையில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் பன்றிக் கொழுப்பு, எருமை கொழுப்பு, மீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை கலந்துள்ளதாக மத்திய அரசின் பகுப்பாய்வு அறிக்கையும் உறுதி செய்துள்ளது. மேலும் திருமலைக்கு நெய் சப்ளை செய்தது திண்டுக்கல்லை சேர்ந்த ஏஆர் டெய்ரி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து திருப்பதியில் லட்டு செய்வதற்கு நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனத்தை கருப்பு பட்டியலில் வைத்ததோடு, நெய்யையும் திருப்பி அனுப்பியுள்ளது திருப்பதி தேவஸ்தானம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த நிறுவனத்தின் நெய் தரமற்றதாக இருப்பதாக திருப்பி அனுப்பப்பட்டதோடு, அந்த நிறுவனம் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கலப்பட நெய்யை விதிமுறைகளுக்கு மாறாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு கொடுத்த ஏஆர் டைரி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் தேவஸ்தான அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.

இதை அடுத்து உணவு பொருள் கலப்படம், மத உணர்வை புண்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஏஆர் டைரி நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகர் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானது. இதனையடுத்து தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் திருப்பதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் கலப்பட நெய் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஆந்திர அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. நேற்று அந்த குழு திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் லட்டு பிரசாதம் தயாரிக்கும் இடம் உள்ளிட்ட பகுதிகளை சோதனை நடத்தியது. அதில் சில முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இன்று சிறப்பு புலனாய்வு குழுவினர் தமிழகம் வருகின்றனர். திண்டுக்கல்லில் மதுரை சாலையில் உள்ள ஏஆர் டெய்லி ஆலையில் அவர்கள் சோதனை நடத்த இருப்பதாகவும், ஏற்கனவே அனுப்பப்பட்டு பாதுகாக்கப்படும் நெய்யின் மாதிரிகள் மற்றும் தற்போது நெய்யின் மாதிரிகள் சேகரிக்கவுள்ளனர்.

மேலும் ஆலை உரிமையாளர்கள், பணியாளர்களிடம் விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் அந்த ஆலையில் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், மத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் சோதனை நடத்தி மாதிரிகளை எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+