திருக்குறள்- திருவள்ளுவர்- அவ்வையார்.. ரொம்ப கன்பியூஸ் ஆகிட்டாரோ? திண்டுக்கல் சீனிவாசன் புது சர்ச்சை
திண்டுக்கல்: அதிமுக கட்சி கூட்டத்தில் திருக்குறளை ஒப்புவித்து எழுதியது அவ்வையார் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது. அத்துடன் என்னது வள்ளுவர் அதை எழுதினாரா? என மேடையிலேயே சீனிவாசன் கேட்டது அனைவரையும் அதிர்ச்சி அடையவும் வைத்தது.
Recommended Video
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் எதையாவது பேசி சர்ச்சையை உருவாக்கி விடுகிறார். அண்மையில் இயேசுவை சுட்டுக் கொன்ற கோட்சேவின் வாரிசுகளா? என சீனிவாசன் பேசியது பெரும் சர்ச்சையானது.

திருக்குறளும் அவ்வையாரும்
இந்த சர்ச்சையே ஓயாத நிலையில் திருக்குறளை எழுதியது அவ்வையார் என பேசியுள்ளார் சீனிவாசன். சட்டசபை தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் வடக்குப் பகுதி அதிமுக ஆலோசனை கூட்டம் நேற்று திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அவ்வையாரின் குறள்
இந்த கூட்டத்தில் சீனிவாசன் பேசுகையில், அருமையாக மழை பெய்கிறது. பெயருக்கு ஏற்றார் போல மும்மாரி மழை பெய்து நிலத்தடி நீர் பெருகுகிறது. எல்லாம் நன்றாக சிறப்பாக உள்ளது. நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்று அந்த காலத்தில் அவ்வையார் பாடினார்.

என்னது வள்ளுவர் சொன்னாரா?
அந்த காலத்தில் அரசனை நம்பி அந்த அம்மா பாடினார்கள் .. என பேசிக் கொண்டிருந்தார். அப்போது மேடையில் இருந்தவர் எழுந்து, நீங்க சொன்ன குறளை எழுதியது திருவள்ளுவர் என்றார். உடனே அதிர்ச்சி அடைந்தவரான சீனிவாசன், என்னது வள்ளுவர் சொன்னாரா? சரி அவ்வையாரும் சொன்னார்.. திருத்திக் கொள்ளலாம்..

எழுதி வெச்சு படிக்கலை
வள்ளுவர் சொல்லியிருக்கிறார். ரெண்டு பேரும் சொல்லியிருக்கிறாங்க.. அதனால தப்பு இல்லை.. அவ்வையாரும் சொல்லியிருக்காங்க. வரப்புயர நீர் உயரும் என அவ்வையாரும் சொல்றாங்க. நாம என்ன எழுதி வெச்சிகிட்டா பேசுகிறோம்.. கருத்துகளைத்தானே சொல்றோம்.. விஷயம் ஒன்னுதானே.. நல்ல மனசு இருந்தா மழை பெய்யும் என கூறி சமாளித்தார் சீனிவாசன்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications