தென் மாவட்டங்களில் தெனாவெட்டு காட்டும் தாதாக்கள்-அரங்கேறும் பழிக்குப் பழி கொலைகள்- ஒடுக்குமா அரசு?

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: தென்மாவட்டங்களில் தாதாக்கள் மீண்டும் தலையெடுக்கத் தொடங்கிவிட்டனர். பல ஆண்டுகளுக்கு முந்தைய விரோதங்களுக்கு பழிக்குப் பழிவாங்கும் வகையில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நிகழ்வது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் சில நாட்களுக்கு முன்னர் அப்துல் காதர் என்பவர் 10 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். சாத்தான்குளத்தில் நடந்த கொலைக்கு பழிக்கு பழிவாங்கவே இந்த படுகொலை நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

திருநெல்வேலியில் கீழசெவல் நயினார் குளத்தை சேர்ந்த சங்கர சுப்பிரமணியன் என்பவர் முன்னீர்பள்ளம் அருகே உள்ள வடுவூர்பட்டி டாஸ்மாக் கடை அருகே தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டார். கடந்த 2014-ம் ஆண்டு கோபாலசமுத்திரத்தில் மந்திரம் என்பவர் கொலை செய்யப்பட்டார். அதற்கு பழிக்குப்பழியாக இந்த கொலை சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

3 நாட்களில் 5 கொலைகள்

3 நாட்களில் 5 கொலைகள்

அடுத்த சில நாட்களிலேயே நெல்லை அருகே உள்ள பிராஞ்சேரியில் பச்சேரி குளத்தாங்கரையில் இளைஞர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். மாரியப்பனின் தலையை போலீசார் தேடி வந்த நிலையில் முன்னீர்பள்ளம் வடுவூர் பட்டி சாலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சங்கரசுப்பிரமணியன் உடல் கிடந்த இடத்தில் மாரியப்பன் தலை கிடந்தது. அதாவது சங்கரசுப்பிரமணியன் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கிறது என்கிறது போலீஸ் தரப்பு. திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 நாட்களில் மொத்தம் 5 படுகொலைகள் நடந்திருக்கின்றன.

திமுக பிரமுகர்கள் மீது கொலை முயற்சி

திமுக பிரமுகர்கள் மீது கொலை முயற்சி


இதேபோல் திண்டுக்கல் நகரிலும் அடுத்தடுத்த கொலை முயற்சி, கொலைகள் தொடருகின்றன. திண்டுக்கல் பெரியகடை வீதியை சேர்ந்த திமுக பிரமுகர்களான பாபு மீரான், விஜயராஜ் ஆகியோர் சட்டாம்பிள்ளை தெருவில் வந்து கொண்டிருந்த போது மர்ம கும்பல் வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயமடைந்த விஜயராஜ், பாபு மீரான் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக திண்டுக்கல் பெரியகடைவீதியை சேர்ந்த மாநகராட்சி 21-வது வார்டு முன்னாள் பெண் கவுன்சிலரின் மகன் மோகன்ராஜ், சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து மோகன்ராஜ் தந்தை உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பசுபதி பாண்டியன் கொலைக்கு பழி

பசுபதி பாண்டியன் கொலைக்கு பழி

திண்டுக்கல் அருகே நிர்மலா தேவி என்ற பெண் இன்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். 2012-ம் ஆண்டு திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவரான பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடையவர் நிர்மாலா தேவி. சுபாஷ் பண்ணையாரின் கூட்டாளியான நிர்மலா தேவி இன்ற் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது தலையை தனியாக துண்டித்து எடுத்து நந்தவனப்பட்டியில் பசுபதி பாண்டியன் வீடு முன்பாக போட்டுவிட்டுச் சென்றுள்ளது அந்த கும்பல்.

தேவை கடும் நடவடிக்கை

தேவை கடும் நடவடிக்கை

இப்படி தென்மாவட்டங்களில் பரவலாக அடுத்தடுத்து பல கொலைகள் தொடருகின்றன. 10,20 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த படுகொலைகளுக்கு திடீரென இப்போது பழிவாங்கும் சம்பவங்களை தாதாக்கள் அரங்கேற்றுவது பொதுமக்களை பெரும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது. இத்தகைய படுகொலைகள் ஜாதி, மத ரீதியான மோதல்களாக விஸ்வரூபம் எடுக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆகையால் இத்தகைய விஷ செடிகளை முளையிலேயே தமிழக அரசு கிள்ளி எறிய, தாதாக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டியது மிக மிக முதன்மையான பணி என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+