கண்ணை மூடிக்க..சர்ப்ரைஸ் இருக்கு! திவாகர் பேச்சை கேட்ட பிரின்சி! கள்ளக்காதலால் காருக்குள் முடிந்த கதை!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திருப்பூர் அருகே பல்லடத்தில் காரில் வைத்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை கொடைரோடு அருகே சாலையோரம் புதைக்க முயன்ற கொலையாளிகளை கார் மற்றும் இருசக்கர வாகனத்துடன் கைது செய்து அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள தனியார் மில்லில் பணியாற்றி வந்தவர் அருண் ஸ்டாலின் விஜய் (32) இவரது மனைவி பிரின்சி (27) இவர்களுக்கு 6-வயது மகன் உள்ளார்.

Two people were arrested in Dindigul for driving around with the dead body of a young woman

இந்நிலையில் இதே கம்பெனியில் பணியாற்றிய ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தை சேர்ந்த திவாகர் (24) இவருக்கு திருமணமாகி உமாபாரதி என்ற மனைவியும் ஒரு பையனும் பெண் குழந்தையும் உள்ளனர்...

கள்ளக்காதல்: இந்நிலையில், பல்லடத்தில் தங்கி பணியாற்றி வந்த பிரின்சியுடன் அதே கம்பெனியில் பணியாற்றி வந்த திவாகருக்கும் பிரின்சிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இச்சம்பவம் திவாகரின் மனைவிக்கு தெரியவரவே திவாகர் கடந்த ஒரு மாதமாக பிரின்ஸியின் தொடர்பை துண்டித்ததாக தெரிகிறது. இதனையடுத்து கள்ளக்காதலன் திவாகரிடம் பிரின்ஸி பணம், நகை கேட்டு தொல்லை மற்றும் தொடர்ந்து டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது.

கொலை திட்டம்: இதனால் ஆத்திரமடைந்த திவாகர் பிரின்ஸ்சியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தில் உள்ள தனது உறவினர் இந்திரகுமார் (31) என்பவரை பல்லடத்திற்கு ஆம்னி கார் எடுத்து வரச்சொல்லி கூறியுள்ளார் பல்லடத்திற்கு காரில் வந்த உறவினர் இந்திரகுமார் மற்றும் திவாகர் ஆகிய இருவரும் பல்லடத்தில் ஒரு இடத்தில் கள்ளக்காதலி பிரின்சிக்கு போன் செய்து அழைத்துள்ளனர்.'

Two people were arrested in Dindigul for driving around with the dead body of a young woman

: அப்போது அங்கு வந்த பிரின்சியிடம் காரில் உனக்கு கிப்ட் பரிசு பொருள்கள் வைத்திருக்கிறோம் நீ கண்ணை மூடிக்கொள் அந்த பொருளை சஸ்பென்சாக உனக்கு கொடுக்கிறோம் எனக் கூறியுள்ளனர். மகிழ்ச்சியில் கள்ளக்காதலனிடமிருந்து பரிசு பொருளை பெறுவதற்காக பிரின்சி கண்ணை மூடிய போது காரில் மறைத்து வைத்திருந்த நைலான் கயிரால் கழுத்தை நெறித்து கொலை செய்தனர். நேற்று வெள்ளிக்கிழமை காலை கொலை செய்யப்பட்ட பிரின்சி உடலை காருக்குள் வைத்து அவரை பல்லடத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் செல்லும் வழியில் சாலையோரம் ஒரு இடத்தில் புதைக்க முடிவு செய்தனர்.

புதைக்க திட்டம்: அதற்காக மண்வெட்டி, கடப்பாரை போன்ற ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, நேற்று இரவு பிரின்சி உடலை காருக்குள் வைத்து, தாராபுரம், ஒட்டன்சத்திரம், கொடைரோடு நான்கு வழி சாலை வழியாக மதுரை நோக்கி சென்றுள்ளனர். காரை திவாகரின் உறவினர் இந்திரகுமார் ஓட்டிச் சென்றார். காரை பின் தொடர்ந்து கள்ளக்காதலன் திவாகர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, கொடைரோட்டை அடுத்த அம்மையநாயக்கனூர் அருகே பள்ளபட்டி பிரிவு என்ற இடத்தில் இரவில் காரை சாலையோரம் நிறுத்தி, பிரின்சி உடலை புதைக்க திட்டமிட்டதாக தெரிகிறது.

போலீசார் சோதனை: அப்போது, அந்த வழியாக மதுரை மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து போலீசார், சந்தேகத்தின் பேரில் அந்த காரை சோதனை செய்த போது, அதில் பெண்ணின் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, அம்மையநாயக்கனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற அம்மையநாயக்கனூர் போலீசார், சடலமாக இருந்த பிரின்சி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை: மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, கள்ளக்காதலன் திவாகர் அவரது உறவினர் இந்திரகுமார் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்கள் பெண்ணின் சடலத்தை ஏற்றி வந்த கார் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+