திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உயிருக்கு உயிராய் ‘பழக்கம்’! 2 மாசமாம்.. வீட்டை விட்டு மாயமான மாணவிகள்! காரணத்தை கேட்டு போலீஸ் ஷாக்!

Google Oneindia Tamil News

திண்டுக்கல் : திண்டுக்கல் வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டி பகுதியில் காணாமல் போன இரண்டு பள்ளி மாணவிகள் 2-மாதங்களுக்கு பின் சென்னையில் மீட்டுள்ள நிலையில் மாணவிகளுக்கிடையேயான 'நட்பை' துண்டிக்க சொன்னதால் இரு மாணவிகளும் விபரீத முடிவெடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டி காந்திபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரது 17 வயது மகளும், பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சாமகோட்டையைச் சேர்ந்த ஒருவரது மகளும் தோழிகளாக பழகி வந்தனர்.

இவர்கள் பட்டிவீரன்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் கடந்த அக்டோபர் 22-ம் தேதி டியூசன் செல்வதாக கூறிவிட்டு சென்றவர்களை காணவில்லை.

சிலருக்கு வயிறு எரியுது! இந்தியாவின் வளர்ச்சி பொறுக்க முடியல! பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் சுளீர் பதில் சிலருக்கு வயிறு எரியுது! இந்தியாவின் வளர்ச்சி பொறுக்க முடியல! பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் சுளீர் பதில்

இரு மாணவிகள்

இரு மாணவிகள்

ஆனால் டியூசனுக்கும் போகவில்லை. இருவரும் தீபாவளிக்கு எடுத்த புது துணியை மட்டும் எடுத்து பேக்கில் வைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதில் மாணவி செல்வஹர்ஷனா வீட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில் அப்பா, அம்மா என்னை மன்னித்துவிடுங்கள். என்னை தேட வேண்டாம் என எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்த மாணவியின் தாயார் முத்துலட்சுமி பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

மாயம்

மாயம்

இந்த புகாரின் பேரில் ஆய்வாளர் சங்கரேஸ்வரன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவிகளை தேடி வந்தனர். இதுகுறித்து நிலக்கோட்டை துணை கண்காணிப்பாளர் முருகன் உத்தரவின் பேரில், தனிப்படை அமைத்து மாணவிகளை தேடி வந்தனர். இந்நிலையில் காணாமல் போன 2-மாணவிகளும் சென்னையில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து காவல்துறையினர் சென்னை சென்றனர்.

விசாரணை

விசாரணை

அங்கு பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்று இருவரையும் மீட்ட காவல்துறையினர் திண்டுக்கல் சமூகநல அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவர்களை விசாரணை செய்தனர்.

என்ன காரணம்?

என்ன காரணம்?

அதில் பள்ளியில் படிக்கும்போதே இருவரின் பெற்றோரும் ஒருவருக்கொருவர் பேசக்கூடாது என கட்டுப்பாடு விதித்ததால் 'நட்பை' தொடர இருவரும் வீட்டைவிட்டு வெளியேறினோம் என தெரிவித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், தாங்கள் அவரவர் பெற்றோருடன் செல்வதாக பட்டிவீரன்பட்டி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் இரண்டு சிறுமிகளை பத்திரமாக மீட்டுக் கொடுத்த காவல் துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

English summary
Two schoolgirls who went missing in Pattiveeranpatti area near Dindigul were found in Chennai after 2-months, it has been reported that both girls took a tragic decision as they were told to end their friendship.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X