திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோல்டு வின்னர் கம்பெனியில் 1,600 டன் ஆயிலை ஆட்டைய போட்ட உதவி மேனேஜர்கள்- காப்பு கட்டியது போலீஸ்!

Google Oneindia Tamil News

பழனி: கோல்டு வின்னர் எண்ணெய் உற்பத்தி செய்யும் காளீஸ்வரி ரீபைண்ட் ஆயில் நிறுவனத்தில் ரூ18.5 கோடி மதிப்பிலான 1,600 டன் சமையல் எண்ணெய்யை திருடி வெளிச் சந்தையில் விற்பனை செய்ததாக 2 உதவி மேலாளர்களை போலீசார் கைது செய்தனர்.

தாராபுரத்தில் சோகம்.. ஆற்றில் குளிக்க சென்ற 5 மாணவர்கள் உட்பட 6 பேர் பலி.. பரிதாப சம்பவம் தாராபுரத்தில் சோகம்.. ஆற்றில் குளிக்க சென்ற 5 மாணவர்கள் உட்பட 6 பேர் பலி.. பரிதாப சம்பவம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தாழையூத்தில் காளீஸ்வரி ரீபைண்ட் ஆயில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள பிரபல எண்ணெய் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக காளீஸ்வரி ரீபைண்ட் ஆயில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

காளீஸ்வரி ஆயில்

காளீஸ்வரி ஆயில்

மிகவும் பிரபலமான கோல்டு வின்னர், ஸ்ரீகோல்டு, எல்டியா தேங்காய் எண்ணெய் ஆகியவை காளீஸ்வரி குழுமத்தின் தயாரிப்பு ஆகும். இந்த நிறுவனத்திற்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

உதவி மேலாளர்கள்

உதவி மேலாளர்கள்

இந்த நிலையில், திண்டுக்கல், தாழையூத்தில் உள்ள நிறுவனத்தில் பழனியைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 51) மற்றும் கரண்குமார் (வயது 31) ஆகிய 2 பேர் பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவருமே அந்த நிறுவனத்தின் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நீண்ட ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் பணியாற்றியதால் நிறுவனம் இவர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தது.

சமையல் எண்ணெய் இருட்டு

சமையல் எண்ணெய் இருட்டு

அந்த நம்பிக்கையை பயன்படுத்திக் கொண்ட இவர்கள் இருவரும், அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள சதித்திட்டம் தீட்டியுள்ளனர். இந்த சதித்திட்டத்தின்படி, கடந்த சில ஆண்டுகளாக உற்பத்தி திறன் குறைவாக இருப்பதாக இருவரும் பொய்யான கணக்ககுகளை நிர்வாகத்திடம் தொடர்ந்து காட்டி வந்துள்ளனர். இதைப் பயன்படுத்தி, ஆலைக்கு சொந்தமான சமையல் எண்ணெயை யாருக்கும் தெரியாமல் திருடி வெளிச்சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளனர்.

1600 டன், ரூ18.5 கோடி

1600 டன், ரூ18.5 கோடி

இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை சுமார் 1,600 டன் சமையல் எண்ணெய்யை கொஞ்சம் கொஞ்சமாக திருடி வெளிச்சந்தையில் இதுவரை விற்பனை செய்து மோசடி செய்துள்ளனர். இவர்கள் திருடி விற்பனை செய்த சமையல் எண்ணெயின் மதிப்பு ரூபாய் 18.5 கோடி ஆகும். இவர்களது திருட்டு மோசடி வேலையை அறிந்த காளீஸ்வரி நிர்வாகம் அதிர்ந்து போனது. பின்னர் போலீசில் புகார் கொடுக்க தற்போது 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

English summary
The two staffs of Kaleesuwari Refinery Company were arrested for Cheating case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X