நிலத்தை ஆட்டைய போட்டங்க.. கேட்டா அமைச்சர் பேரை சொல்லி மிரட்டுறாங்க! எஸ்பியிடம் புகார் அளித்த மக்கள்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: போலி ஆவணங்கள் மூலம் தங்களது சொத்துக்களை அபகரித்துக் கொண்டவர்களிடமிருந்து மீட்டுத் தருமாறு பாதிக்கப்பட்டவர்கள் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். மேலும் மோசடியாளர்கள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் பெயரை பயன்படுத்தி மிரட்டுவதாகவும் அவர்கள் தங்கள் புகாரி மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் நில மோசடி சம்பவங்களும், போலி பத்திரப்பதிவு சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் அதிக அளவு நில மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

dindigul police crime

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மட்டும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் ஒன்றாக சேர்ந்து வந்து மனு அளித்திருந்தனர்.

அந்த மனுவில் வேடசந்தூர் பகுதியில் உள்ள தங்களது பல கோடி ரூபாய் மதிப்புள்ள 31 ஏக்கர் சொத்துக்களை சிலர் கூட்டு சதி செய்து முறைகேடான ஆவணங்கள் மூலம் பத்திரம் தயார் செய்து விற்பனை செய்ததாக குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக ஜமால் முகமது, ஜெய்னுல் ஆபிதீன், வசிம் ராஜா, ஜாகிர் நியாஸ், சண்முகம் செட்டியார் ஆகிய ஐந்து பேர் தான் இந்த மோசடியில் ஈடுபட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்களுடைய நிலத்தை மீட்டு தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது,

dindigul police crime

தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் புகார் கொடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்துள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இது தொடர்பாக பேசிய போது, எங்கள் நிலங்களை ஜமான் முகமது, வசீம் ராஜா உள்ளிட்டோர் போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.

மோசடி செய்த நிலத்தை தங்களுக்கு மீட்டுத் தருமாறு கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். மேலும் தங்களுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி வரை அனைவரையும் தெரியும், எங்களை ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டுகின்றனர். இது குறித்து நீதிமன்றத்திற்கு சென்றாலும் நாங்கள் பணத்தை கொடுத்து சரி செய்து விடுவோம் என மிரட்டுவதாக கூறியுள்ளனர். 128 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டு தங்களுடைய சொத்துக்களை மீட்டு தர வேண்டும்" என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+