திண்டுக்கல் குடிசையில் தாத்தா உடன் தூங்கிய 5 வயது சிறுவன்.. அங்கேயே எமனாக பதுங்கியிருந்த பாம்பு
திண்டுக்கல்: சுருட்டை என்று அழைக்கப்படும் கட்டு விரியன், கண்ணாடி விரியன் மற்றும் நாகப்பாம்பு போனற்வை இரவில் தான் உணவு தேடி வருகின்றன. கிராமங்களில் காட்டுப்பகுதி இருக்கும் என்பதால் வீடுகளின் வாசல் வழியாகவே செல்லும். அங்கு பாய் விரித்து இரவு நேரத்தில் சிலர் உறங்குகிறார்கள்.. அப்படித்தான் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே, தாத்தாவுடன் குடிசையில் தூங்கிய 5 வயது சிறுவனுக்கு எமனாக மாறியிருக்கிறது. பெரும்பாலும் இதுபோன்ற சம்பவங்களுக்கு நாகப்பாம்பு மற்றும் கட்டுவிரியன் காரணமாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு வகையான பாம்புகள் இருந்தாலும் நல்ல பாம்பு என்று அழைக்கப்படும் நாகப்பாம்பு, கண்ணாடி விரியன், கட்டு விரியன் என்ற மூன்று வகை பாம்புகளே விஷம் நிறைந்தவை.. இவை தான் பாம்புக்கடி உயிரிழப்புகளுக்கு காரணமாக இருக்கின்றன. இதில் கண்ணாடி விரியனும், கட்டு விரியனும் இரவில் உணவு தேட வருகின்றன. அப்படி வரும் போது, மனிதர்களை தாக்குகின்றன. திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்..

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே இருக்கிறது வேலகவுண்டன்பட்டி. இந்த கிராமத்தில் 43 வயதாகும் பீமராஜ் கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். அவருடைய மனைவி ரேவதி (40). இந்த தம்பதிக்கு ஐந்து வயதில் கண்ணன் என்ற மகனும், 2 வயதில் சந்தானம் என்ற மகனும் உள்ளனர். இதில், கண்ணன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தான். செம்பட்டி அருகே வீ.கூத்தம்பட்டியில் ரேவதியின் தந்தை தங்கவேலின் (60 வயது) வீடு இருக்கிறது. தங்கவேல் தனது வீட்டை இடித்துவிட்டு, கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதனால் வீட்டின் அருகே குடிசை அமைத்து, அதில் தங்கவேல் தங்கி இருக்கிறார்.
இந்தநிலையில் குழந்தை கண்ணன், தனது தாத்தா வீட்டுக்கு சென்றான். நேற்று முன்தினம் இரவு தங்கவேல், கண்ணன் ஆகியோர் குடிசை வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்துள்ளார்கள். நள்ளிரவில் திடீரென கண்ணன் அலறினான். அந்த சத்தம் கேட்டு தங்கவேல் திடுக்கிட்டு எழுந்திருக்கிறார். சிறிதுநேரத்தில் கண்ணனின் வாயில் இருந்து நுரை தள்ளியது. இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கவேல் கண்ணனின் தந்தை பீமராஜிக்கு தகவல் தெரிவித்தார். அவரும் அங்கு விரைந்தார்.
பின்னர் அவர்கள், கண்ணனை, சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், கொடிய விஷம் கொண்ட பாம்பு கண்ணனை கடித்திருப்பதாக கூறினார்க்ள, தொடர்ந்து அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் கண்ணன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து செம்பட்டி காவல் நிலையத்தில் பீமராஜ் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடிசைக்குள் பதுங்கி இருந்த பாம்பு கடித்து 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் செம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications