ஒட்டன்சத்திரம் டூ திண்டுக்கல் சென்ற திருச்சி பஸ்.. நள்ளிரவு 1 மணி.. பின் சீட்டில் பயணி இருந்த கோலம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியிலிருந்து திருச்சிக்கு நேற்று இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் சுமார் 22 பயணிகள் இருந்தனர். பஸ் ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்திற்கு வந்ததும் அதில் சுமார் 30 வயதுடைய வாலிபர் ஏறி உள்ளார். அவர் பின் இருக்கையில் அமர்ந்துள்ளார். அவரை தவிர பின் இருக்கையில் யாருமில்லை. மேலும் அவருக்கு அடுத்து யாரும் பேருந்தில் ஏறவில்லை. இந்நிலையில் பேருந்து ரெட்டியார்சத்திரம் அருகே சென்ற போது அந்த பயணி இருந்த கோலம் பயணிகளை ஆடிப்போக வைத்துள்ளது.
பேருந்துகளில் செல்லும் போது ஒருவர் அப்படி செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகிறது. அந்த அளவிற்கு திண்டுக்கல் மாவட்டத்தையே அதிரவைக்கும் சம்பவம் நடந்திருக்கிறது. ஒடும் பேருந்தில் தூக்கிட்ட நிலையில் ஒருவரை மீட்டுள்ளனர். என்ன நடந்தது... யார் என்பதை பார்ப்போம்.

ஒட்டன்சத்திரத்தில் ஏறிய பயணி
திண்டுக்கல் மாவட்டம் பழனியிலிருந்து திருச்சிக்கு நேற்று இரவு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை 60 வயதாகும் ஓட்டுநர் ராமச்சந்திரன் ஓட்டினார். 38 வயதாகும் கண்டக்டராக செந்தமிழ்ச்செல்வன் அந்த பேருந்தில் பணியாற்றினார். திருச்சி நோக்கி சென்ற அந்த பேருந்தல் சுமார் 22 பயணிகள் இருந்தனர். பேருந்து பழனியை கடந்து வந்தது. ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்திற்கு வந்ததும் அதில் சுமார் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் ஏறினார். அந்த வாலிபர் திண்டுக்கல் செல்வதற்கு கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கியிருக்கிறார். அதன்பிறகு பஸ்சில் அதன் பிறகு பயணிகள் யாரும் ஏறவில்லை. இதனால் பின் இருக்கையில் அந்த வாலிபர் மட்டுமே அமர்ந்து இருந்தார்.
நள்ளிரவில் சத்தம்
கண்டக்டர் பயணிகளுக்கு டிக்கெட்டுகளை கொடுத்து விட்டு டிரைவர் இருக்கைக்கு அருகே உள்ள இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார். ஒட்டன்சத்திரத்தில் இருந்து புறப்பட்டு பஸ் திண்டுக்கல் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. பஸ்சின் உள்பகுதியில் இருந்த விளக்குகள் அணைக்கப்பட்டன. சுமார் 20 நிமிடம் கழித்து, நள்ளிரவு 1 மணி அளவில் ஒட்டன்சத்திரம் அருகே ரெட்டியார்சத்திரம் என்னுமிடத்தில் பஸ் வந்தது. பின் பகுதியில் ஏதோ சத்தம் கேட்டது.
பேருந்தில் பயணி இருந்த கோலம்
உடனே கண்டக்டர் செந்தமிழ்ச்செல்வன் எழுந்து சென்று என்ன சத்தம் என்று போய் பார்த்தார். அங்கு பின் வாசல் படிக்கட்டு அருகே இருந்த கம்பியில் வேட்டியால் அந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்கியது தெரியவந்தது.. இதைப் பார்த்த கண்டக்டரும், பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பஸ்சை டிரைவர் நிறுத்தினார். இது குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீஸ் விசாரணை
உடனே ரெட்டியார்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்?, எதற்காக தற்கொலை செய்து கொண்டார், என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பேருந்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் திண்டுககல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முக்கிய அறிவிப்பு: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது.. தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications