திண்டுக்கல் மைதிலி.. அத்தனை பேர் முன்பு அசிங்கமாக.. பழனி கோயிலில் கேமராவை பார்த்து அதிர்ந்த ஆபிசர்ஸ்
திண்டுக்கல்: திண்டுக்கல் பழனியில் அசிங்கமாக மாட்டிக் கொண்டுள்ளார் மைதிலி.. அத்தனை பேர் முன்பும் வசமாக சிக்கிய மைதிலி, ஒரு கல்லூரி பேராசிரியர் என்பது அதிர்ச்சியை தந்து வருகிறது.
உலகப்புகழ் பெற்ற முருகன் கோயில்களில் ஒன்றுதான் பழனி தண்டாயுதபாணி திருக்கோயில்.. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்கள், பிற நாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்துவிட்டு போவார்கள்.

இந்த கோயிலுக்கு வருவதற்கென்றே மாலை அணிந்து விரதம் இருந்து, கார்த்திகை, மார்கழி மாதங்களில் திரண்டு வந்து தரிசனம் செய்வார்கள்..
கூட்ட நெரிசல்: விரத நாட்களை தவிர, விஷேச நாட்களிலும், வாரந்தோறும் ஞாயிறு, வெள்ளி, செவ்வாய்கிழமைகளிலும் பழனி முருகன் கோயிலில் கூட்ட நெரிசல் அதிகமாகவே காணப்படும்.
இப்படி கோவிலுக்கு வரும் முருக பக்தர்கள், தரிசனம் முடிந்ததுமே, அங்கிருக்கும் உண்டியல்களில் பணம், நகை, நவதானியங்களை காணிக்கையாக செலுத்திவிட்டு போவார்கள்.. குறிப்பிட்ட நாட்களுக்கொருமுறை, கோவில் நிர்வாகம் சார்பில் இந்த உண்டியல் எண்ணப்படும். கடந்த 10ம் தேதியும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் நிரம்பி, காணிக்கைகளை எண்ணும் பணியும் நடந்தது..
விடுமுறை: கடந்த மாதம் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் முழு ஆண்டுத்தேர்வு தொடர் விடுமுறை என்பதால், 27 நாட்களிலேயே கோயில் உண்டியல் நிறைந்துவிட்டது.. அதனால், கார்த்திகை மண்டபத்தில் வைத்து உண்டியல் எண்ணப்பட்டது. இந்த உண்டியல் எண்ணும் நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவியர்கள், ஆசிரியர்கள், திருக்கோயில் அலுவலர்கள் பங்கேற்றிருந்தனர்.. இதில், கோயில் உண்டியல் காணிக்கை மொத்தமாக ரூ.2.24 கோடியை தாண்டியிருந்தது.
இதைத்தவிர, உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், பட்டை, தாலி, மோதிரம், செயின் மற்றும் தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன பிஸ்கட், காசுகள், சிறிய வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம், பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகள் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
உண்டியல்: இந்நிலையில், தற்போது பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்துள்ளது.. வழக்கம்போல் கோயில் ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
இவர்களுடன் பழனி கோயில் நிர்வாகத்தின் கீழுள்ள பள்ளி, கல்லூரி ஆசிரியைகள் மற்றும் மாணவிகளும் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.. இதில், பழனியாண்டவர் மகளிர் கல்லூரி தற்காலிக பேராசிரியை மைதிலி என்பவரும் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
மைதிலி: மைதிலிக்கு 40 வயதாகிறது.. இவர் உண்டியல் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தபோது, அடிக்கடி எழுந்து சென்று வந்தார்.. பணம் எண்ணும்போது இவர் ஏன் அடிக்கடி எழுந்து செல்கிறார் என்று அலுவலர்கள் சந்தேகமடைந்தார்கள்.. அதனால், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களையும் உடனடியாக ஆராய்ந்தனர்.. அப்போதுதான், உண்டியலில் எண்ணிக் கொண்டிருந்த பணத்தை நைசாக எடுத்து கொண்டு சென்று, தன்னுடைய பைக்குள் வைத்து விட்டு வருவதை பார்த்தனர்..
ஒவ்வொரு முறையும் பணம் எண்ணும்போது, சிறிது பணத்தை கையில் யாருக்கும் தெரியாமல் மறைத்து எடுத்து சென்று, வெளியில் வைக்கப்பட்டிருந்த தன்னுடைய பையில் வைத்துவிட்டு வருவதை பார்த்து நிர்வாகிகள் அதிர்ந்தனர்.
அசிங்கம்: இதையடுத்து, கோயில் நிர்வாகம் அடிவாரம் போலீசில் புகார் தந்தது.. போலீசாரும் உடனடியாக விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.. அப்போது, ரூ.80 ஆயிரம் பணத்தை மைதிலி எடுத்தது தெரியவந்தது.. அதை பறிமுதல் செய்த போலீசார் மைதிலியை அதிரடியாக கைது செய்தனர். அத்தனை பள்ளி, கல்லூரிகள் முன்னிலையில் பேராசிரியை மைதிலி கைதானது மிகுந்த பரபரப்பையும், அதிர்ச்சியையும் தந்துவிட்டது..!!
இதுகுறித்து கோயில் நிர்வாகம் தரப்பில் சொல்லும்போது, கடந்த வருடம் நடந்து முடிந்த கும்பாபிஷேகத்தை தொடர்ந்து முருக கடவுளுக்கான விழாக்கள் அடுத்தடுத்த நடந்து வருகின்றன. இதனால் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிமாகிவிட்டது.
விசாரணை: எனவே, இதனால் உண்டியல் காணிக்கையும் அதிகமாக கிடைப்பதால் மாதந்தோறும் எண்ணிக்கை பணி நடக்கிறது. பணம் எண்ணும் பணி நடக்கும் பகுதியில் சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தியுள்ளோம். இறை பற்றுள்ளவர்களால் தான் எண்ணிக்கை நடத்துகிறோம்... ஆனால் அதையும் மீறி கோயில் பணத்தை இப்படி திருடியது அதிர்ச்சியை தந்து வருகிறது..
இதற்கு முன்பும் கோயில் பணியாளர்கள் இதுபோன்று திருடி மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.. ஆனால், இப்போது கல்லூரி பேராசிரியை ஒருவரே திருடியிருப்பது வருத்தமாக உள்ளது என்றார்கள்.. நேற்று உண்டியல் எண்ணிக்கையில் 778 கிராம் தங்கம், 12.039 கிலோ வெள்ளி, 1.66 கோடி ரூபாய் காணிக்கையாக கிடைத்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்க வேல்: இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு, உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது தங்கத்தினாலான, வேல் ஒன்றை துப்புரவுப் பணியாளர் கணேசன் என்பவர் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் நடந்த அடுத்த மாதமே, தென்காசியினைச் சேர்ந்த சுந்தர் என்பவர் உண்டியலில் இருந்து ரூ.300 பணத்தை திருடியிருந்தார்.. இத்தனைக்கும் இவர் அந்த கோயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த செக்யூரிட்டி ஆவார்.. அதேபோல, கோயிலில் பொருட்கள் பாதுகாப்பு அறையிலும் நிறைய திருட்டுகள் நடந்துவருகின்றன.
பாக்கியலட்சுமி: பாக்கியலட்சுமி என்ற 44 வயது பெண், உண்டியல் காணிக்கைகள் எண்ணும்போது, காலில் ரப்பர்பேண்ட் வைத்து 10.8 கிராம் அளவுள்ள தங்க நகையை நூதனமாக திருடியதை பார்த்து கோயில் நிர்வாகமே அதிர்ந்துபோய்விட்டது. அப்போது உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவர்களே, இதனைப் பார்த்து கோயில் அலுவலர்களுக்கு தகவல் தந்திருககிறார்கள்.. அவரை சோதனையிட்டபோது, பாக்கியலட்சுமியின் காலில் ஏகப்பட்ட நகையை திருடி மறைத்துவைத்திருந்ததும் அம்பலமானது.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியானது கோயில் இணை ஆணையர் மற்றும் அலுவலர்கள் மேற்பார்வையில், சிசிடிவி கேமரா கண்காணிப்பில் நடைபெறுவது வழக்கம் என்றாலும், இவைகளையும் மீறி திருட்டு சம்பவங்கள் நடப்பது அதிர்ச்சியை தந்துவருவதாக கோயில் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications