திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராஜ்ய சபா எம்பி சீட்.. ஸ்டாலினிடம் இதை செய்ய சொன்னதே நான் தாங்க.. வைகோ கலகல

Google Oneindia Tamil News

Recommended Video

    Vaiko Pressmeet : ராஜ்ய சபா சீட்.. ஸ்டாலினிடம் சொன்னதே நான் : வைகோ கலகல

    திண்டுக்கல் : ராஜ்யசபா தேர்தலில் தாம் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் மாற்றுஏற்பாடு செய்யுமாறு ஸ்டாலினிடம் கூறியதால் தான் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ மாற்றுவேட்பாளராக போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.

    ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று மனுத் தாக்கல் செய்தார். அதேநேரத்தில் வைகோவுக்கு எதிரான தேசதுரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

    why dmk is 4th candidate nr elango filed nomination today at rajya sabha elections : explain vaiko

    இந்த தண்டனை ஒரு மாத காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போதிலும், வைகோவின் வேட்பு மனு ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்டுமா என்பது குறித்து சந்தேகம் நிலவுகிறது.

    இந்நிலையில் .திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, வைகோவுக்கு மாற்று வேட்பாளராக போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

    அடிமேல் அடி.. குமாரசாமி அரசுக்கு ஆதரவு இல்லை.. ஆளுநரிடம் கடிதம் கொடுத்த சுயேச்சை எம்எல்ஏஅடிமேல் அடி.. குமாரசாமி அரசுக்கு ஆதரவு இல்லை.. ஆளுநரிடம் கடிதம் கொடுத்த சுயேச்சை எம்எல்ஏ

    இது தொடர்பாக திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது: "நான் எம்பியாக வேண்டும் எனபதே ஸ்டாலினின் விருப்பம். நான் எம்பி ஆவதாக இருந்தால் மட்டுமே மதிமுகவுக்கு சீட் என ஸ்டாலின் ஒப்பந்தத்தில் தெரிவித்து இருந்தார். ஆனால் தேச துரோக வழக்கில் எனக்கு தண்டனை கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. சுதந்திர இந்தியாவில் யாருக்கும் இது போன்ற வழக்கில் தண்டனை தரப்பட்டதில்லை. எனது வேட்புமனு ஏற்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

    அதேநேரம் ராஜ்யசபா தேர்தலில் நான் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் மாற்றுஏற்பாடு செய்யுமாறு ஸ்டாலினிடம் நான் தான் கூறினேன். வழக்கு ஒன்றில் ஆஜராக செல்வதால் நாளை வேட்புமனு பரிசீலனைக்கு நான் செல்ல மாட்டேன். எனக்கு பதில் மாற்று வேட்பாளர் என்.ஆர். இளங்கோ செல்வார். எனது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டால் இளங்கோ தனது மனுவை திரும்ப பெறுவார்" இவ்வாறு கூறினார்.

    English summary
    mdmk leader vaiko explain, why dmk is 4th candidate nr elango filed nomination today at rajya sabha election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X