வழக்கத்துக்கு மாறாக முன்னரே படையெடுத்த ஈசல்கள்... அப்புறம் என்ன களைகட்டியது ஈசமாவு சீசன்
திண்டுக்கல்: அடைமழை காலத்தில் படையெடுக்கும் ஈசல்கள் இந்த ஆண்டு ஆவணியே ஊர்வலம் கிளம்பிவிட்டது. இதனையடுத்து திண்டுக்கல் சுற்றுவட்டார கிராமங்களில் ஈசல் மாவு தயாரிப்புதான் வீடுகளில் இப்போது ஸ்பெஷல் அயிட்டமாக தயாராகி வருகிறது.
பொதுவாக கிராமங்களில் புரட்டாசி மழையில் தான் ஈசல் பெருமளவு பறக்கும். இப்படி பறக்கும் ஈசல்களை சாக்கு சாக்காக பிடிப்பதற்காக கிராம மக்கள் திருவிழா கூட்டம் போல திரளுவார்கள்.

இப்படி பிடிக்கப்படும் ஈசல்களை வைத்து என்ன செய்வார்கள் என கேட்கிறீர்களா? ஈசல்கள் சொற்ப நேர வாழ்நாள் கொண்டவைதான்.
சாக்கு பைகளில் பிடிக்கப்படும் ஈசல்களை ஜஸ்ட் ஒரு உலுக்கு உலுக்கினால் இறக்கைகள் உதிர்ந்துவிடும். அப்புறம் ஈசல்களை நன்றாக காயவைத்து வறுத்து இடித்து அரிசி மாவு, கம்புமாவு, நாட்டு சர்க்கரை இப்படி எல்லாம் சேர்த்து சத்துமாவு போல சாப்பிடுவது திண்டுக்கல் சுற்றுவட்டாரங்களில் வழக்கம்.
இது உடல் ஆரோக்கியத்துக்கு வலிமை சேர்க்கக் கூடியது; புரத சத்து நிறைந்தது என்பது கிராம மக்களின் நம்பிக்கை. சில ஆண்டுகளாக மழையே எட்டிப்பார்க்காமல் போனதாலும் வளர்ந்துவிட்ட நாகரிக மோகத்தாலும் கிராமங்களில் ஈசல் மாவு கலாசாரம் காணாமலேயே போய்விட்ட சூழ்நிலைதான்.
இல்லையெனில் மழைகாலங்களில் கிராமங்களில் பொது உரல்களில் பெண்கள் கூடி ஈசமாவு இடிப்பதும் வீடுகளுக்கு பகிர்ந்து கொடுத்து அனுப்புவதும் அது ஒரு கொண்டாட்ட காலம்தான். சரிங்க...
ஈசலில் நாய் ஈசல் என ஒருவகை இருக்கிறது. அது சாப்பிடுவதற்கு ஏற்றது இல்லையாம்.
நெல் ஈசல், கொழுந்து ஈசல், மாலைக் கண் ஈசல் இவை எல்லாம்தான் சாப்பிடக் கூடிய வகையறாக்களாம்.
இப்பவே எதுக்கு ஈசல் புராணம்?
திண்டுக்கல் சுற்றுவட்டாரங்களில் இந்த ஆவணியிலேயே ஈசல் அண்ணாச்சிகள் படையெடுத்துவிட்டனர்.. இதனால் ஏக குஷியில் கிராம மக்கள் ஈசமாவு தயாரிப்பில் இறங்கிவிட்டனர்.
அப்புறம் என்ன ஜே! ஜே! கொண்டாட்டம்தான்!
-
வேலுமணி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா! எடப்பாடி பழனிசாமிக்கு பேரதிர்ச்சி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! வானிலை மையம் வார்னிங்! -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்? -
தமிழகத்தில் 3 நாட்களில் 15,349 ரவுடிகளிடம் விசாரணை! போலீஸ் டிஜிபி பரபரப்பு தகவல்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை












Click it and Unblock the Notifications