"டைம் ஆச்சு!" அயன் பாக்ஸ் எடுத்த திண்டுக்கல் மாணவி! அடுத்த நொடி அலறல் சத்தம்! மின்சாரம் பாய்ந்து பலி

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: பெண் ஒருவர் அயன் பாக்ஸ் பயன்படுத்தும்போது எதிர்பாராத விதமாக ஷாக் அடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நவீனக் காலத்தில் நமது வாழ்க்கையை எளிமையாக மாற்ற பல்வேறு கருவிகள் இருக்கவே செய்கிறது. இதன் மூலம் முன்பு பல மணி நேரம் கஷ்டப்பட்டுச் செய்த காரியத்தைக் கூட நம்மால் இப்போது சுலபமாகச் செய்ய முடிகிறது.

இதன் மூலம் நமது வாழ்க்கை ரொம்பவே ஈஸியாக மாறி வருகிறது. அதேநேரம் இதுபோன்ற சாதனங்களைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவையே நமக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

Woman died as she tried to iron her dress in rush to college

விபத்து: அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்துள்ளது.. திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே பிள்ளமநாயக்கன்பட்டி என்ற பகுதியில் வசித்து வந்தவர் சுவேதா.. இவர் அங்கே இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். நேற்றைய தினம் ஸ்வேதா வழக்கம் போல கல்லூரிக்குக் கிளம்பியுள்ளார். நேரம் ஆகிவிட்டதால், அவர் அவசர அவசரமாகக் கல்லூரிக்குக் கிளம்பியுள்ளார்.

நேரம் ஆகிவிட்டதால் அவசர அவசரமாகச் சுடிதாரை அயன் செய்ய ஆரம்பித்துள்ளார். சுடிதாரை அயன் செய்ய ஆரம்பிக்கும் போது, ஈரக் கையுடன் இருந்ததாகத் தெரிகிறது. இதனால் எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. திடீரென அதிகளவில் மின்சாரம் பாய்ந்ததில் சுவேதா அங்கேயே தூக்கி வீசப்பட்டார். சுவேதாவின் அலறல் சத்தம் வீடு முழுக்க கேட்டுள்ளது.

தீவிர சிகிச்சை: இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், சுவேதாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மருத்துவமனை சார்பில் அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மருத்துவமனைக்கு வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஈரக் கையுடன் அயன் செய்ததால் எதிர்பாராத விதமான மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Woman died as she tried to iron her dress in rush to college

வழிமுறைகள்: பொதுவாக அயன் செய்யும் நாம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஈரக்கையுடன் அயன் பாக்ஸ் மட்டுமின்றி, அதிக மின்சாரம் வரும் எந்தவொரு மின்சாதன பொருட்களையும் நாம் தோடக் கூடாது. இல்லையென்றால் இதுபோன்ற மோசமான பாதிப்புகள் ஏற்படும்.

அயன் செய்யும் போது, அதற்கான பலகையை எப்போதும் பயன்படுத்த வேண்டும். இதை ஹீட் பர்னையும் தவிர்க்க உதவும். எவ்வளவு அவசரம் ஆனாலும் ஆடைகளை அணிந்து இருக்கும் போதே அவற்றை அயன் செய்யக் கூடாது. சிலர் இதுபோன்ற விபரீதமான காரியங்களையும் செய்கிறார்கள். எக்காரணத்தைக் கொண்டும் அந்த தவறை செய்துவிடாதீர்கள்.

அதேபோல பெட் அல்லது நிலத்தில் நேரடியாக வைத்து அயன் செய்யக் கூடாது. பெட்டில் வைத்து அயன் செய்தால் தீ விபத்து ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். படுக்கையில் துணிகளைச் சலவை செய்தால் தீ மற்றும் தீக்காயங்கள் ஏற்படும். எரியக்கூடிய பொருட்களில் விடப்பட்ட இரும்புப் பெட்டிகளில் இருந்து தீ பரவியதாகப் பல வழக்குகள் உள்ளன.

முக்கியமான அதன் ஒயரில் எதாவது பாதிப்பு இருக்கிறதா என்பதை செக் செய்யுங்கள். ஒயரில் எதாவது பாதிப்பு இருந்தால் அது மின்கசிவை ஏற்படுத்தி, மோசமான விபத்தை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+