முத்தரசியுடன் தனிக்குடித்தனம்.. வேறு பெண்ணை மணக்க.. அடித்து கொன்று வீட்டுக்குள்ளேயே புதைத்த டிரைவர்

கல்லூர் மாணவி கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: காலேஜ் படிக்கிற பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, அந்த பெண்ணுடன் கொஞ்ச நாள் தனிக்குடித்தனமும் நடத்திவிட்டு, வேறு பெண் கிடைத்ததும், அந்த பெண்ணை அடித்து கொலை செய்துள்ளார் ஒரு இளைஞர்.. இதற்கு இளைஞரின் பெற்ற தாயும் உடந்தை!

திண்டுக்கல் மாவட்டம் கேத்தம்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகள் முத்தரசி ஒரு தனியார் கல்லூரியில் பிஎட் படித்து வந்தார்.

திருப்பூர் மாவட்டம், ஆத்துக்கால்புதூரில் இவரது அக்கா வீடு உள்ளது. அதனால் அடிக்கடி வந்து அக்காவை பார்த்து விட்டு போவார். அப்போதுதான் லாரி டிரைவர் பரத் பழக்கமாகி உள்ளார். நாளடைவில் காதல் மலர்ந்தது. இந்நிலையில் போன மார்ச் மாதம் முத்தரசியை காணவில்லை.

விசாரணை

விசாரணை

இதனால் அவரது வீட்டில் வேடசந்தூர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து பல இடங்களில் பரத்துடன் முத்தரசியை பார்த்திருப்பதாக பலர் சொல்லவும், பரத்தை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது உண்மையை ஒப்புக் கொண்ட பரத் போலீசிடம் சொல்லியதாவது:

தனிக்குடித்தனம்

தனிக்குடித்தனம்

"முத்தரசியை நான் சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்வதாக சொல்லி, ஆத்துக்கால்புதூரிருக்கு அழைத்து வந்துவிட்டேன். ஒரு வீட்டையும் எடுத்து வீட்டுக்கு தெரியாமல் தங்க வைத்தேன். தனிக்குடித்தனம் வைத்தது வேறு யாருக்கும் தெரியாது.

கல்யாணம்

கல்யாணம்

ஆனால் என் வீட்டில் வேற இடத்தில் பெண்ணை பார்த்தனர். புது பொண்ணை பார்த்ததும் முத்தரசியை கல்யாணம் பண்ண இஷ்டம் இல்லை. அதனால் கைவிட முடிவு செய்யும்போது எங்களுக்குள் நிறைய சண்டை வந்தது. அதனால் ஒருநாள் முத்தரசியை தனியே கூப்பிட்டு சென்று அவள் தலையில் பலமாக அடித்தேன். அதில் இவள் இறந்துவிட்டாள்.

புதைத்தனர்

புதைத்தனர்

உடனே என் வீட்டில் போய் இதை சொல்லவும், அவர்கள் அவசர அவசரமாக வந்து முத்தரசியின் உடலை எங்கள் வீட்டுக்கு பின்னாடியே குழிதோண்டி புதைச்சாங்க. கொஞ்ச நாளில் எனக்கு கல்யாணம் முடிவானது. கல்யாணம் நடக்கிற சமயத்துல, வீட்டுக்குள்ள பிணம் இருக்கிறது நல்லா இருக்காதுன்னு நினைச்சு, திரும்பவும் குழிதோண்டி பிணத்தை வெளியே எடுத்தோம். ஆனால் உடம்பு அழுகிவிட்டு இருந்தது.

பொட்டல் காடு

பொட்டல் காடு

அந்த உடம்பை தோண்டி எடுத்து, பொட்டல் காட்டில் கொண்டு போய் வைத்து எரிச்சிட்டோம். எனக்கு கல்யாணமும் நடந்து விட்டது"என்றார். இதையடுத்து, முத்தரசியை கொன்ற பரத், பெண்ணின் உடலை எரிக்க முயன்ற பரத்தின் அம்மா, உதவியாக இருந்த கோவிந்தன் ஆகியோரை கைது செய்யப்பட்டனர். பரத்தின் அப்பாவும் உடந்தையாம். ஆனால் தலைமறைவாக உள்ளதால், போலீசார் தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+