துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேம் சேஞ்சர்ஸ்.. இவங்க மனது வச்சா மேட்ச் மாறும்.. பைனலில் நியூசி - ஆஸி மோதல்.. வெல்லப்போவது யார்?

Google Oneindia Tamil News

துபாய்: 2021 உலகக் கோப்பை டி 20 இறுதிப்போட்டியில் இன்று நடக்கும் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும் எதிர்பார்ப்போடு தொடங்கிய மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான டி 20 உலகக் கோப்பை 2021 தொடர் இன்றோடு முடிவிற்கு வருகிறது. யாருமே எதிர்பார்க்காத வகையில் கணிப்புகளை புறக்கணித்துவிட்டு இரண்டு பெரிய அணிகள் பைனலுக்கு வந்துள்ளது.

இந்த தொடரின் தொடக்கத்தில் இங்கிலாந்து, இந்தியா இரண்டும்தான் பைனல்ஸ் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்பின் தொடர் செல்ல செல்ல இந்தியாவின் ஆட்டம் காரணமாக பாகிஸ்தான், இங்கிலாந்து பைனல்ஸ் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கோவை மாணவி தற்கொலை வழக்கு.. பெங்களூருவில் பதுங்கியிருந்த பள்ளி முதல்வர் மீரா கைது கோவை மாணவி தற்கொலை வழக்கு.. பெங்களூருவில் பதுங்கியிருந்த பள்ளி முதல்வர் மீரா கைது

கணிப்பு

கணிப்பு

ஆனால் கணிப்புகளை பொய்யாக்கி செமி பைனலில் நியூசிலாந்து அணி இங்கிலாந்தை வீழ்த்தியது. இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இதனால் உலகக் கோப்பை டி 20 தொடரில் இந்த முறை நியூசிலாந்து அல்லது ஆஸ்திரேலியா முதல்முறை கோப்பையை வெல்ல உள்ளது. இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சம பலத்தில் இருப்பதால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து

நியூசிலாந்து

இந்த போட்டியில் நியூசிலாந்து அணிதான் சிறப்பான பேட்டிங், வலுவான பவுலிங் என்று முழு ஆல் ரவுண்டர் அணியாக உள்ளது. ஆஸ்திரேலியா அணியிடம் பேட்டிங் வலுவாக இருந்தாலும் பவுலிங் அவ்வளவு வலிமையாக இல்லை. ஆனால் எப்போது இறுதிப்போட்டிகளில் ஆஸ்திரேலியா உயிரை கொடுத்து ஆடி வெற்றிபெறும் என்பதால் இந்த போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

2015ல் நடந்த உலகக் கோப்பை 50 ஓவர் தொடரில் ஏற்கனவே நியூசிலாந்து ஆஸ்திரேலியாவிடம் பைனலில் தோல்வி அடைந்தது. அதில் 183 ரன்கள் மட்டுமே 45 ஓவரில் நியூசிலாந்து எடுத்தது. 33.1 ஓவரிலேயே ஆஸ்திரேலியா 186/3 ரன்கள் எடுத்து வென்றது. இந்த நிலையில் 2015 உலகக் கோப்பை பைனலுக்கு பழி தீர்க்க இன்று ஆஸ்திரேலியாவை நியூசிலாந்து எதிர்கொள்ள உள்ளது.

5 பேர்

5 பேர்

நியூசிலாந்து அணி முழுக்க மார்டின் குப்தில், டார்லி மிட்சேல், ஜேம்ஸ் நீசம், இஷ் சவுதி, டிரெண்ட் போல்ட் ஆகியோர் அணியின் மேட்ச் வின்னர்களாக இருக்கிறார்கள். அந்த அணியில் இவர்கள் 5 பேரும் நினைத்தால் ஆட்டத்தின் முடிவை எந்த நொடியிலும் மாற்ற முடியும். முக்கியமாக டார்லி மிட்சேல், டிரெண்ட் போல்ட் இருவரும் இன்று நியூசிலாந்து அணியின் மிகப்பெரிய கேம் சேஞ்சர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், பாட் கும்மின்ஸ், மிட்சல் மார்ஷ், ஆடம் சாம்பா ஆகியோர் முக்கியமான கேம் சேஞ்சர்களாக இருப்பார்கள். அது போக மேக்ஸ்வெல் நல்ல பார்மில் இருப்பதால் இன்று அதிரடியாக ஆடும் பட்சத்தில் அவர் மொத்தமாக ஆட்டத்தை மாற்றும் வாய்ப்புகளும் உள்ளன. இவர்கள் 5 பேர் நினைத்தால் ஆஸ்திரேலியாவிற்கு முதல் டி 20 உலகக் கோப்பையை வாங்கி கொடுக்க முடியும்.

 வாய்ப்பு

வாய்ப்பு

இவர்கள்தான் இன்றைய ஆட்டத்தில் கேம் சேஞ்சர்களாக இருக்க போகிறார்கள். இது போக இன்னொரு பக்கம் கேன் வில்லியம்சன் முக்கியமான போட்டிகளில் பொறுப்பாக ஆடுவார் என்பதால் அவரின் ஆட்டமும் கவனிக்கப்படும். 2021 டி 20 உலகக் கோப்பை தொடரில் புதிய சாம்பியன் வர உள்ளதால் இன்றைய ஆட்டம் கண்டிப்பாக விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
2021 World Cup T20: Who will be the game changers in Australia vs New Zealand finals today?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X