Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நியூசிலாந்துக்கு சிக்கலை தரப்போகும் வீரர்.. எடுத்த அதிரடி முடிவு .. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் குஷி

Subscribe to Oneindia Tamil

துபாய்: நாளை டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 12 ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் இந்தியா வென்றே ஆக வேண்டும் என்ற அளவில் வாழ்வா சாவா ஆட்டம் ஆகும். இந்த போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பந்து வீச போகிறார் என்ற தகவல்கள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Recommended Video

    Hardik Pandya-வை திருப்பி அனுப்ப முடிவெடுத்த BCCI.. தடுத்து நிறுத்திய Dhoni

    கடந்த ஞாயிறு அன்று நடந்த போட்டியில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு நியூசிலாந்தை வீழ்த்தியே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் உள்ளது. இதேபோல் பாகிஸ்தான் உடன் தோற்றதால் நியூசிலாந்து அணியும் இந்தியாவை வென்றால் தான் உள்ளே போக முடியும் என்ற நிலை உள்ளது.

    ஏனெனில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்திய பிறகு சின்ன சின்ன அணிகளுடன் மோத போகிறது. எளிதாக வென்று அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும். இந்தியாவைப் போலவே நியூசிலாந்துக்கும் அதே நிலை தான் உள்ளது.

    வெளியான காட்சிகள்

    வெளியான காட்சிகள்

    இந்நிலையில் இந்த போட்டியில் இந்தியாவுக்கு ஊக்கமளிக்கும் செய்தி என்னவென்றால், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, நியூசிலாந்திக்கு எதிராக எதிராக பந்துவீச தயாராகி வருகிறார். நியூசிலாந்துக்கு கேன் வில்லியம்சனுக்கு இவர் சிம்ம சொப்பனமாக இருப்பார். வெள்ளிக்கிழமை காலை அவர் வலைபயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

    பந்து வீசுவார்

    பந்து வீசுவார்

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இந்திய கிரிக்கெட் அணி பயிற்சி பெறும் வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோவில் 28 வயதாகும் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, பந்தை சுழற்றியபடி பந்துவீசும் காட்சிகள் இருந்தது. வலை பயிற்சியில் இறங்கி உள்ளதால் அவர் நியூசிலாந்துக்கு எதிராக பந்து வீசுவார் என்று தெரிகிறது

    பேட்டராக இருந்தார்

    பேட்டராக இருந்தார்

    2018 ஆம் ஆண்டு முதுகுதண்டுவட அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதிலிருந்து பாண்டியா பந்துவீசுவது குறைந்தவிட்டது. உண்மையில், துபாயில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் அவர் ஒரு பேட்டராக மட்டுமே விளையாடியுள்ளார்.

    ஐபிஎல்

    ஐபிஎல்

    கடந்த ஜூலை மாதம் இந்தியாவின் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது அவர் அதிகமாக பந்து வீசினார். அங்கு அவர் மூன்று ODIகள் மற்றும் ஒரு T20I முழுவதும் 16 ஓவர்கள் வீசினார். இருப்பினும், துபாயில் நடந்த இந்தியன் பிரீமியர் லீக் சீசனின் இரண்டாவது பாதியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் பந்துவீசவே இல்லை.

    விளையாடவில்லை

    விளையாடவில்லை

    பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் போட்டித் தொடக்க 10-விக்கெட் இழப்பிலும் பாண்டியா பந்துவீசவில்லை, இருப்பினும், பேட்டிங் செய்யும் போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் இன்னிங்ஸ் முழுவதும் அவர் களத்திற்கு வெளியே இருந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் முதல் ஆட்டத்திற்கு முன்னதாக பேசிய கேப்டன் விராட் கோலி, போட்டியில் பாண்டியா பந்துவீசுவார் என்று கூறியிருந்தார். ஆனால் அவர் பந்து வீசவில்லை. நாளை நியூசிலாந்து உடன் போட்டியில் பந்து வீசுவார் என்று நம்பப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    அதிரடி வீரர்

    அதிரடி வீரர்

    பாண்டியா இந்தியாவிற்காக 50 டி20 போட்டிகளில் பந்து வீசி உள்ளார். இதில் 815 பந்துகளை வீசியவர், இதில் 1111 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். 42 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். அவரேஜ் 26.45 ஆகும். எக்கனாமி 8.17 வைத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 19.4 வைத்துள்ளார். எனவே இவரது பந்து வீச்சு கூடுதல் பலமாக இந்திய அணிக்கு அமையும்

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+