3 வருட சாபம்.. இந்திய அணியில் தலைதூக்கிய அதே பழைய"பிரச்சனை".. ரோஹித் இன்று என்ன செய்வார்?
துபாய்: 3 வருட பழைய பிரச்சனை ஒன்று இந்திய அணியில் மீண்டும் தலை தூக்கி உள்ளது. இதை ரோஹித் எப்படி சமாளிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய அணியில் யுவராஜ் சிங் ஓய்வு பெற்றதில் இருந்தே சரியான ஆல் ரவுண்டர் இல்லாத பிரச்சனை நிலவி வந்தது. கடந்த சில வருடங்களாக இந்த பிரச்சனை உச்சத்தில் இருந்தது.
முக்கியமாக கடந்த 2019 உலகக் கோப்பை 50 ஓவர் தொடரில் இந்த பிரச்சனை தலை தூக்கியது. அப்போது வாய்ப்பு பெற்ற விஜய் சங்கர் மிக மோசமாக ஆடி ஏமாற்றம் அளித்தார்.
அதன்பின் கடந்த வருடம் நடந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா சரியான பார்மில் இல்லை.

நல்ல காம்போ
இந்த நிலையில்தான் இந்திய அணியில் கடந்த 4-5 மாதங்களாக வீரர்கள் பார்மிற்கு திரும்பினர். ஜடேஜா நல்ல பார்மில் இருந்தார். அதேபோல் ஹர்திக் பாண்டியா பார்மிற்கு திரும்பினார். இதனால் இரண்டு பேருமே அணியில் சிறப்பாக ஆடினார்கள். இரண்டு பேருமே அணிக்கு முக்கியமான மேட்ச் வின்னர்களாக மாறினார்கள். பாகிஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெறவும் இது உதவியாக இருந்தது.

என்ன சிக்கல்
இந்த நிலையில்தான் இந்திய அணியில் இருந்து ஜடேஜா விலகி உள்ளார். காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் அணிக்குள் வந்துள்ளார். பெரும்பாலும் இன்று பிளேயிங் லெவனில் அஸ்வின் ஜடேஜா இடத்தில் ஆட வாய்ப்பு உள்ளது. இதில் என்ன சிக்கல் என்றால் அக்ஸர் பட்டேல் ஜடேஜா அளவிற்கு சிறப்பான பேட்ஸ்மேன் கிடையாது. ஆனால் அவரை விட நல்ல பவுலர்.

அஸ்வின்
அதேபோல் அஸ்வினும் ஜடேஜா அளவிற்கு சிறப்பான பேட்ஸ்மேன் இல்லை. ஆனால் அவரை விட நல்ல பவுலர். இவர்கள் இருவரில் யார் இந்திய அணிக்குள் வந்தாலும் அணியின் பவுலிங் பலம் பெரும். ஆனால் பேட்டிங் பலம் கொஞ்சம் குறையும். இதுதான் இந்திய அணிக்கு தற்போது சிக்கலாகி உள்ளது. 2019ல் இந்திய அணிக்கு ஏற்பட்ட பிரச்சனை மீண்டும் ஏற்பட்டுள்ளது. சாபம் போல இந்த விஷயம் இந்திய அணியை தொடருகிறது.

ரோஹித் முடிவு
இன்று பாகிஸ்தானுக்கு எதிராக ரோஹித் சர்மா யாரை அணியில் தேர்வு செய்வார் என்ற கேள்வி இதனால் எழுந்துள்ளது. ஜடேஜாவின் இடத்தை நிரப்ப போகும் அந்த வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கண்டிப்பாக இந்திய அணி கூடுதல் பவுலர்களோடு செல்ல வாய்ப்பு உள்ளது. அதனால் இன்று இந்திய அணியில் ரோஹித், கே. எல் ராகுல், கோலி, சூர்யா குமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, அஸ்வின் / பண்ட், புவனேஷ்வர் குமார், சாஹல், அர்ஷிதீப் சிங், ஆவேஷ் கான் ஆகியோர் இன்று இந்திய அணியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடும் வாய்ப்புகள் உள்ளன.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications