தமிழருக்கு அடிக்கும் லக்.. ரோஹித் கேப்டன்.. நாளையே மொத்தமாக மாறும் இந்திய அணி.. புதிய டீம் இதுவா?
துபாய்: 2021 உலகக் கோப்பை டி 20 தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. இதுவரை 4 போட்டிகளில் ஆடி 2 போட்டிகளில் மட்டுமே இந்திய அணி வென்றுள்ளது.
நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான லீக் ஆட்டங்களில் இந்தியா தோல்வி அடைந்துவிட்டது. இதனால் இந்திய அணி செமி பைனல் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.
2013க்கு பின் முதல்முறை ஐசிசி கோப்பைக்கான போட்டி ஒன்றில் இந்திய அணி செமி பைனல் செல்லும் வாய்ப்பை இழந்து லீக் ஆட்டங்களில் வெளியேறுகிறது. இன்று இந்திய அணி சம்பிரதாயத்திற்காக இன்று நமீபியாவுடன் ஆட உள்ளது.

கோலி
கோலி டி 20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஏற்கனவே விலகிவிட்டார். இந்த தொடரில் சொதப்பியதால் ஒருநாள் அணியிலும் அவர் கேப்டனாக இருக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள். ரவி சாஸ்திரி உள்ளிட்ட பயிற்சியாளர் குழுவிற்கும் இதுவே கடைசி போட்டி. இன்று கோலிக்கும் கேப்டனாக கடைசி ஆட்டம். இந்திய அணி நியுசிலாந்து டி 20 தொடருக்காக தயாராக வேண்டிய நிலையில் உள்ளது.

நியூசிலாந்து
அதன்படி இந்திய அணி பெரும்பாலும் ரோஹித் சர்மா தலைமையில் நியூசிலாந்து தொடரில் ஆட உள்ளது. ஐந்து ஐபிஎல் கோப்பை வென்றவர் என்பதால் அவருக்கே கேப்டன் பதவி செல்கிறது. ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருப்பார். அண்டர் 19 அணிக்கு பயிற்சி கொடுத்த டிராவிட் டீம் அப்படியே இந்திய அணிக்கும் பயிற்சி கொடுக்க உள்ளது.
Recommended Video

ஓப்பனிங்
இந்திய அணியின் ஓப்பனிங்கில் பெரிய மாற்றம் இருக்காது. ரோஹித், ராகுல், இஷான், கோலி, பண்ட் ஆடுவது உறுதி. இது தவிர கூடுதலாக வேறு ஆல் ரவுண்டர்களை இந்திய அணியில் ரோஹித் எடுப்பார் என்று கூறப்படுகிறது. தற்போது சையது முஷ்டாக் கோப்பை நடந்து வருகிறது. இதில் அனைத்து போட்டியிலும் மகாராஷ்டிரா கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி உள்ளார்.

அதிரடி
அனைத்திலும் இவர் அரைசதம் அடித்துள்ளார். இதனால் நியூசிலாந்து தொடரில் இவருக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்கிறார்கள். அதேபோல் உம்ரான் மாலிக், நடராஜன் போன்ற பவுலர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள். இதில் தேர்வுக்குழு முக்கிய டாஸ்க் ஒன்றுடன் களமிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

பவுலர்
இளம் பவுலிங் ஆல் ரவுண்டரை சையது முஷ்டாக் கோப்பை தொடரில் இந்திய அணி கண்டுபிடிக்கும் என்கிறார்கள். பெரும்பாலும் தமிழரான வெங்கடேஷ் ஐயர் இந்திய அணிக்குள் நியூசிலாந்து தொடருக்காக தேர்வாக வாய்ப்பு உள்ளது. வெங்கடேஷ் ஐயர் முக்கியமான துருப்பு சீட்டாக இருப்பார் இவர் ஹர்திக் பாண்டியா இடத்தை நிரப்புவார் என்று கூறப்படுகிறது. அதேபோல் சாஹல், வருண் ஆகியோருக்கு பதிலாக வேறு லெக் ஸ்பின் பவுலர்களை இந்திய அணி தேர்வு செய்யும் என்கிறார்கள்.

மாற்றம்
அதன்படி ஹர்திக் பாண்டியா, ஷமி, புவனேஷ்வர் குமார், அஸ்வின், சாஹல், வருண் போன்றவர்கள் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. உம்ரான் மாலிக், வெங்கடேஷ் ஐயர், ருத்துராஜ் போன்ற இளம் வீரர்கள், இன்னும் சிலர் அணிக்குள் வருவார்கள். நியூசிலாந்து தொடருக்கு எதிரான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில் உம்ரான் மாலிக், வெங்கடேஷ் ஐயர், ருத்துராஜ் போன்ற பல இளம் படையை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்படும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications