தி.மு.க. ஆட்சி; ஸ்டாலின் முதல்வர்: துபாயில் தி.மு.க.வினர் முப்பெரும் வெற்றி விழா கொண்டாட்டம்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் தி.மு.க நிர்வாகிகள் சார்பில் திமுக வெற்றி விழா, மு.க.ஸ்டாலின் பதவியேற்பை கொண்டாடும் விழா மற்றும் இப்தார் நிகழ்ச்சி என முப்பெரும் விழா நடந்தது.
தமிழகத்தில் தி.மு.க அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

Recommended Video

    தி.மு.க. ஆட்சி; ஸ்டாலின் முதல்வர்: துபாயில் தி.மு.க.வினர் முப்பெரும் வெற்றி விழா கொண்டாட்டம்! - வீடியோ

    எஸ்.எஸ்.மீரான் தலைமை

    எஸ்.எஸ்.மீரான் தலைமை

    அமீரக தி.மு.க அமைப்பாளர் அரிகேசவநல்லூர் எஸ்.எஸ்.மீரான் தலைமையில் இந்த விழா நடந்தது. விழாவில் அமீரக தி.மு.க துணை அமைப்பாளர் பிளாக் துளிப் வரவேற்புரை வழங்கினார். இந்த விழாவில் துபாய் தொழில் அதிபர் ஈஷா அப்துல்லாஹ் அஹ்மது அல் குரைர் (Board of Director Dubai Chamber of commerce and Industries and Chairman , Government of Dubai - Awqaf Endowment funds) சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    தமிழகத்தை முன்னேற்ற வேண்டும்

    தமிழகத்தை முன்னேற்ற வேண்டும்

    அப்போது பேசிய தொழில் அதிபர் ஈஷா அப்துல்லாஹ் அஹ்மது அல் குரைர் கூறியதாவது:-
    தமிழகத்தில் பிரமாண்ட வெற்றியை சாத்தியமாக்கி தமிழக முதல்வராக பதவியேற்றிருக்கும் முக ஸ்டாலினுக்கும், திமுக அமைச்சரவைக்கும், உடன்பிறப்புகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். வருடத்திற்கு இரண்டு மூன்று முறை சென்னை, தமிழகத்திற்கு வந்து செல்கிறேன். முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து நெரிசலை குறைத்து, சிறந்த கட்டமைப்பு வசதிகள் கொண்ட மாநிலமாக தமிழகத்தை உருவாக்கவும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

    மருத்துவ கட்டமைப்பு

    மருத்துவ கட்டமைப்பு

    வளைகுடா நாடுகளை சேர்ந்த பலரும் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்து செல்கின்றனர். அவர்களும் பலனடையும் வகையில் சிறந்த மருத்துவமனைகள் உள்ள மாநிலமாக தமிழகத்தை உயர்த்தி இந்திய- அரபுகளுக்கான உறவு பாலமாக தி.மு.க ஆட்சி அமைய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று ர் ஈஷா அப்துல்லாஹ் அஹ்மது அல் குரைர் தெரிவித்தார்.

    ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்

    ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்

    இதனை தொடர்ந்து பேசிய அமீரக தி.மு.க அமைப்பாளர் அரிகேசவநல்லூர் எஸ்.எஸ் மீரான் கூறுகையில், 'ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த மகத்தான வெற்றியை பெற்று, தமிழக முதலமைச்சராக ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும் முக ஸ்டாலினுக்கு வாழ்த்துகளையும்,பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். உழைப்பு என்பதற்கு அடையாளமாக திகழும் தமிழக முதல்வருக்கு பக்கபலமாக இருந்து அவரது கரத்தை வலுப்படுத்த வேண்டும்' என்று கட்சியினரையும் எஸ்.எஸ் மீரான் கேட்டுக் கொண்டார்.

    விழாவில் வாழ்த்துரை

    விழாவில் வாழ்த்துரை

    இந்த விழாவில் அமீரக மூ.லீக் தலைவர் குத்தாலம் லியாக்கத் அலி, DTS ஜெயந்தி மாலா, பவர் குரூப் MD, ஜாஹிர் ஹுசேன், Allied Motors காமால் , ஆட்டோ விசண் பைரோஸ் , கல்ஃப் நியூஸ் சதீஷ், துபாய் லேடிஸ் அசோசியேசன் தலைவர், மீனாகுமாரி பத்மநாபன், ஜெஸிலா ரியாஸ் உள்ளிட்ட பலரும் வாழ்த்துரை வழங்கினர்.

    கலந்து கொண்டவர்கள் யார், யார்?

    கலந்து கொண்டவர்கள் யார், யார்?

    மேலும் அமீரக தி.மு.க துணை அமைப்பாளர்கள் இர்ஷாத், சரத், சாருமதி, அமீரக தி.மு.க நிர்வாகிகள், அன்பு, இஞ்சினியர் பாலா , ஏஜிஎம் பைரோஸ், வி.எம்.பிரபு, அனீஸ், மணிமொழியன் , இளமுருகன், காங்கிரஸ் கட்சியை சார்ந்த சம்சுதீன், இயூமுலீக் பரக்கத் அலி, மதிமுக வில்லிசேரி பாலமுருகன்,எழுத்தாளர் ஆசிஃப் மீரான், சமூக ஆர்வளர் பிலால் அலியார், ரபீக் சுலைமான் தமிழ் ஆர்வளர் பிரபு மற்றும் மனித நேய கட்சியை சேர்ந்த இப்ராஹிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அமீரக தி.மு.க செயலாளர் முஸ்தஃபா நன்றியுரை வழங்கினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+