ரூ.20 லட்சத்திற்கு துபாயில் தங்கம் வாங்கி.. அதை இந்தியாவில் விற்றால் லாபம் கிடைக்குமா? எளிய உதாரணம்
துபாய்: பொதுவாக வேலைக்காக துபாயில் வசிப்போர் நாடு திரும்பும்போது பல விஷயங்களை நண்பர்களுக்காக வாங்கி வருவார்கள். துபாயில் இந்தியாவைக் காட்டிலும் தங்கம் விலை குறைவாக இருக்கும் சூழலில், அப்படித் தங்கத்தை வாங்கி வந்தால் அதில் லாபம் கிடைக்குமா? இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்!
துபாயில் தங்கம் விலை இந்தியாவில் இருப்பதை விட 5-7% குறைவு தான். இதற்குப் பிரதானக் காரணமே வரி தான். அங்குத் தங்கக் கட்டிகளுக்கு இறக்குமதி வரி, ஜிஎஸ்டி இல்லை. இதன் காரணமாகவே அங்கு விலை குறைவாக இருக்கிறது. அப்போ அங்குப் போய் வாங்கிவிட்டு வந்து இங்கே விற்றாலே லாபம் தானே என நீங்கள் கேட்கலாம்.. அதற்குச் சில கண்டிஷன்கள் உள்ளன.

விதிகள் சொல்வது என்ன
உதாரணமாக 2026 விதிகளின்படி, ஓராண்டுக்கு மேல் அங்குத் தங்குவோர் மட்டுமே குறிப்பிட்ட அலவு தங்க நகைகளை வரி விலக்கின்றிக் கொண்டு வரலாம். மேலும், இதில் சில நடைமுறைச் சிக்கல்களும் உள்ளன. ஒவ்வொன்றாக நாம் அதைப் பார்க்கலாம்!
முதலில் துபாயில் ஓராண்டு வசித்துவிட்டு இஷ்டத்திற்கு எல்லாம் நகையை எடுத்து வர முடியாது. ஓராண்டுக்கு மேல் வெளிநாட்டில் வசித்த இந்தியப் பயணிகளில் ஆண்கள் அதிகபட்சம் 20 கிராம் தங்கத்தை மட்டுமே எடுத்து வர முடியும். அதேபோல பெண்கள் 40 கிராம் வரையிலான தங்க நகைகளை மட்டுமே வரி விலக்கின்றி கொண்டு வரலாம். இது நகைகளுக்கு மட்டுமே, கட்டிகள் அல்லது நாணயங்களுக்கு அல்ல.
வரி செலுத்த வேண்டும்
இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், "இந்த வரம்பிற்குள் இருந்தால் மட்டுமே வரி விலக்கு இல்லாமல் நகையை எடுத்துவர முடியும். இந்த வரம்பைத் தாண்டும்போது நாம் வரி செலுத்த வேண்டும். 3%ல் தொடங்கி 6% அல்லது 10% வரை கூட சுங்க வரி செலுத்த வேண்டிய சூழல் வரலாம். அதேநேரம் ஆறு மாதங்களுக்கு மேல் வெளிநாட்டில் தங்கியவர்களுக்குத் தங்கக் கட்டிகள்/ நாணயங்களில் மட்டும் 6% சலுகை வரி உண்டு. குறைந்த காலப் பயணிகளுக்கு 36-38.5% வரை வரி பொருந்தும். இந்தியாவில் விற்கும்போது, 3% ஜிஎஸ்டி மற்றும் அந்நியச் செலாவணி மாற்றுக் கட்டணங்கள் கட்டாயமாகும்" என்றார்.
இதெல்லாம் உங்களுக்கு ஓகே என்றாலும் இன்னொரு பிரச்சினை இருக்கிறது. அதாவது கரன்சி மதிப்பு எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. கரன்சியில் எதிர்பார்க்காத மாற்றம் நிகழ்ந்தால் உங்கள் லாபம் நொடியில் போய்விடும்.
சிக்கல் அதிகம்
மேலும், இதில் இன்னொரு முக்கியமான சிக்கல் இருக்கிறது. அதாவது தங்கத்தை இந்தியாவுக்கு எடுத்து வரும் விதிகளில் பல சிக்கலானவை. பலருக்கும் இதைப் படித்தாலும் தெளிவு கிடைக்காது. அவ்வளவு ரிஸ்கள் உள்ளன. எனவே, நீங்கள் தங்கம் எடுத்து வரும்போது அவை விதிகளை மீறியிருந்தால் அந்தத் தங்கம் பறிமுதல் செய்யப்படும். மேலும், உங்களுக்கும் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும். சில நேரம் கைது நடவடிக்கையையும் கூட எதிர்கொள்ள நேரிடும். இப்படி பல ரிஸ்க் இருக்கிறது.
எளிய உதாரணம்
ஒரு சின்ன உதாரணத்தையும் நாம் பார்க்கலாம். அதாவது நீங்கள் ₹20 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை துபாயில் வாங்கி இந்தியா எடுத்து வருகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். விதிகளை முறையாகப் பின்பற்றி, அதை இந்தியாவுக்கு எடுத்து வந்தாலும் கூட உங்களுக்கு லாபம் இருக்காது. அங்குக் கிடைக்கும் 5-7% விலை வித்தியாசம் பார்க்கப் பெரிதாகத் தோன்றலாம். ஆனால், 6% சுங்க வரி, 3% ஜிஎஸ்டி, அந்நியச் செலாவணி கட்டணங்கள் ஆகியவை தனியாக உள்ளது. எல்லாவற்றையும் சேர்த்து கணக்கு போட்டால் இதில் லாபத்தை விட ரிஸ்க் தான் அதிகம். எனவே, நகை வாங்கப் பக்கத்தில் இருக்கும் நகைக்கடைக்குச் செல்வதே சிறந்தது!
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
தங்கம் விலை தொடர் உயர்வா! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்.. கெவின் வார்ஷ் முடிவில் தான் எல்லாமே இருக்கு! -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
Gold Price Today: 3 நாள் உயர்வுக்கு பிரேக்.. இன்று குறைந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு? -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
Gold Price Today: தங்கம் விலை இன்றும் அதிரடி உயர்வு.. தொடர்ந்து 3 நாட்களாக அதிகரிப்பு! சென்னையில் ஒரு சவரன் என்ன ரேட்? -
தங்கத்தை எந்த இடத்தில் மறைத்து கடத்துவதுனு விவஸ்தையே இல்லாம போச்சே! ஆடி போன அகமதாபாத் சுங்கத் துறை












Click it and Unblock the Notifications