துபாயில் தேமுதிக சார்பில் கபடி போட்டி.. முதல் பரிசை தட்டிச் சென்றது கிங் பாய்ஸ் அணி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு தேமுதிக சார்பில் கபடி போட்டி நடைபெற்றது.
அமீரக பிரிவு துபாய் தேமுதிக சார்பாக ரம்லா மால் அருகே உள்ள முதலீட்டு பூங்காவில் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமீரக தேமுதிக துனைச் செயலாளர் நெல்லை ஆர்.தவசி முருகன் கபடி போட்டியை துவக்கி வைத்தார். எஸ்.காரல்மார்ஸ் தலைமையில் பரிசு அளிப்பு விழா நடைபெற்றது.

அமீரக அவைத்தலைவர் காமல், அமீரக பொருளாளர் சதீஸ்குமார் மற்றும் துனைச் செயலாளர்கள் அம்ஜத்அலி, கே.மாரிமுத்து சகிலன் மற்றும் முகமது ரபீக், ஹனிபா, சந்தகுமார் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விறுவிறுப்பாக நடந்த போட்டியின் இறுதியில், துபாய் கிங் பாய்ஸ் அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. யுனிவேசன் பாய்ஸ் அணி இரண்டாவது பரிசு பெற்றது.













Click it and Unblock the Notifications