இந்தியர்களுக்கு ஜாக்பாட்! துபாயில் ஒரு வீடு, 2 வருஷ விசா! எல்லாமே இனி ஈஸி.. விதிகளை மாற்றி அமீரகம்

Subscribe to Oneindia Tamil

அமீரகம்: அமெரிக்கா - ஈரான் போர் காரணமாகத் துபாய் ரியல் எஸ்டேட் சந்தை வரலாறு காணாத அளவுக்கு மந்தமடைந்துள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் ரெசிடென்சி விசா விதிகளில் அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளது துபாய் நில மேம்பாட்டுத் துறை.! இந்த மாற்றங்கள் இந்தியர்களுக்கு மிகப் பெரிய ஜாக்பாட்டாகவே அமைகிறது.

நமது நாட்டில் இருந்து பலரும் வளைகுடா நாடுகளுக்கு, குறிப்பாக அமீரகத்திற்கு வேலைக்குப் போவது அதிகம். மேலும், அமீரக ரியல் எஸ்டேட் சந்தையிலும் இந்தியர்கள் அதிகம் முதலீடு செய்து வருகிறார்கள். அங்கு முதலீடு செய்யும் பிராசஸ் ஈஸி என்பதாலேயே பலரும் அங்கு முதலீடு செய்கிறார்கள். குறிப்பாகத் துபாய் ரியல் எஸ்டேட் தான் முக்கியமானதாக இருக்கும்.

Dubai Real Estate India UAE

துபாய் ரியல் எஸ்டேட் சந்தை

இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாகவே துபாய் ரியல் எஸ்டேட் சந்தை உச்சத்தில் இருந்ததால் இந்தியர்களால் அதிகம் அதில் முதலீடு செய்ய முடியாமல் இருந்தது. இருப்பினும், வளைகுடா போர் நிலைமையை மொத்தமாக மாற்றிப் போட்டது. இதனால் துபாய் ரியல் எஸ்டேட் சந்தை மந்தமான ஒரு சூழலை எதிர்கொண்டுள்ளது. இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு துபாய் நில மேம்பாட்டுத் துறை சில முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதாவது அங்கிருந்த 'குறைந்தபட்ச சொத்து மதிப்பு' என்ற தடையைத் தற்போது துபாய் அரசு நீக்கியுள்ளது. இதன் மூலம் நடுத்தர வர்க்கத்தினரும், இளைஞர்களும் எளிதாகத் துபாய் விசா பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நிபந்தனைகள் நீக்கம்

இதுவரை துபாயில் இரண்டு ஆண்டுக்கால சொத்து சார்ந்த விசா பெற வேண்டுமானால், அந்தச் சொத்தின் மதிப்பு குறைந்தது 7,50,000 திர்ஹம்கள் (சுமார் ₹1.9 கோடி) இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. இப்போது இந்த 7,50,000 திர்ஹம் என்ற குறைந்தபட்ச வரம்பு முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. நீங்கள் எந்த விலையில் வீடு வாங்கினாலும், தனி நபராக அந்த வீட்டிற்கு உரிமையாளராக இருந்தால் 2 ஆண்டு விசா பெற முடியும் ஒரு வீட்டை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இணைந்து கூட்டு உரிமை முறையில் வாங்கினால், ஒவ்வொரு முதலீட்டாளரின் பங்கும் குறைந்தது 4,00,000 திர்ஹம்கள் (சுமார் ₹1.3 கோடி) இருக்க வேண்டும் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஏன் இந்த அதிரடித் தளர்வு?

அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக 2026ம் ஆண்டின் முதல் காலாண்டில் துபாய் ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் 24% சரிவைக் கண்டன. குறிப்பாக, பிப்ரவரி 28 முதல் ஏப்ரல் 29 வரையிலான காலகட்டத்தில் பரிவர்த்தனைகள் 89% வரை வீழ்ச்சியடைந்தன. இந்த மந்தநிலையை மாற்றி, நடுத்தர வருவாய் கொண்ட முதலீட்டாளர்களை ஈர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜாக்பாட்

துபாயில் முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். எனவே, இந்த தளர்வு இந்தியர்களுக்குத் தான் பெரிய ஜாக்பாட்.! ஜுமைரா வில்லேஜ் சர்க்கிள் (JVC) போன்ற பகுதிகளில் உள்ள ஓரளவுக்கு மதிப்பு வீடுகளை வாங்கினாலும் இனி விசா பெற முடியும். மேலும், இதனால் ஸ்டுடியோ அப்பார்ட்மெண்ட்கள் மற்றும் சிறிய வீடுகளை விற்பனையும் அதிகரிக்கும்.. இளைஞர்கள் மற்றும் முதல்முறை வீடு வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துபாய் நில மேம்பாட்டுத் துறையான DLD மற்றும் விசா வழங்கும் துறையான GDRFA ஆகியவை இப்போது ஒரே டிஜிட்டல் தளத்தில் இணைக்கப்பட்டுள்ளதால், பேப்பர் ஒர்க் குறையும். இதன் மூலம் விசா ஈஸியாக பிராசஸ் செய்யப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+