'கோஸ்ட் சிட்டி' ஆக மாறிய துபாய்! மொத்தமா போச்சு.. இப்போ எப்படி இருக்குன்னு பாருங்க!
துபாய்: ஈரான் விஷயத்தில், அமெரிக்காவுக்கு துபாய் சப்போர்ட் செய்து வந்தது. இந்நிலையில், துபாய் மீது ஈரான் சரமாரியான தாக்குதலை நடத்தியிருக்கிறது. இதனால் துபாயை விட்டு ஏராளமான மக்கள் வெளியேறியுள்ளனர். எனவே நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது.
துபாயின் வருவாய், சுற்றுலா துறையை நம்பிதான் இருக்கிறது. ஆனால் போர் காரணமாக பலரும் துபாயை விட்டு வெளியேறி வருகின்றனர். புதியதாக சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை. எனவே மொத்த வருவாயும் முடங்கியுள்ளது.

சுற்றுலாத்துறை
ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கியமான நகரம்தான் துபாய். இந்த நாடு, பணத்துக்காக வெறும் எண்ணெய் விற்பனையை மட்டும் நம்பி இருக்கவில்லை. மாறாக, துபாய் போன்ற நகரங்கள் மூலம் சுற்றுலாவை வைத்து வருமானத்தை ஈட்டி வருகிறது. இந்த ஆண்டு தொடக்கம் முதல், மாதம் மாதம் சுமார் 20 லட்சம் சுற்றுலா பயணிகள் துபாய்க்கு வந்திருக்கின்றனர். இது கடந்த ஆண்டை விட 3% அதிகமாகும்.
அதேபோல துபாயின் தங்குமிடம் மற்றும் உணவு சேவைகள் துறை 5% அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளன. இப்படித்தான் ஐக்கிய அரபு அமீரகம் தனது வருவாயை அதிகரித்து வருகிறது.
துபாய் மீது தாக்குதல்
ஆனால், ஈரான் போரில் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் ஆதரவாக அமீரகம் செயல்பட்டதால் இந்த வருவாயை அந்நாடு இழந்திருக்கிறது. அமெரிக்க ராணுவ துருப்புகள், வளைகுடா நாடுகளில் இருக்கும் ராணுவ மையங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு, துபாயின் பிரபலமான நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த ஒட்டல்களை குறி வைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால், ஓட்டல்களில் தங்கியிருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் துண்டை காணோம், துணியை காணோம் என்று அவசர அவசரமாக வெளியேறியுள்ளனர். எனவே ஓட்டல்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
விமான சேவை பாதிப்பு
மறுபுறம் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. துபாய் உலகின் மிகவும் பிசியான விமான நிலையமாகும். கிழக்கு நாடுகளையும், மேற்கு நாடுகளையும் இது இணைக்கிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த துபாய் சர்வதேச விமான நிலையம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால் பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. நிலைமை கை மீறவில்லை. கட்டுக்குள்தான் இருக்கிறது என்று துபாய் அரசு சொன்னாலும், அங்கு இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை என்பதே உண்மை.
Dubai has became a “ghost town”pic.twitter.com/JIvVqT1Rrj
— Jackson Hinkle 🇺🇸 (@jacksonhinklle) March 11, 2026
கோஸ்ட் சிட்டி
இது தவிர போர் பயம் காரணமாக மக்கள் வெளியில் வராமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இதனால் முக்கிய சாலைகளான ஷேக் சையத் ரோடு போன்ற சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கடற்கரையில் சுற்றுலா பயணிகள் இல்லை. தெருக்களில் வளர்ப்பு பிராணிகளான நாய்களும், பூனைகளும் நூற்றுக்கணக்கில் கைவிடப்பட்டிருக்கின்றன. இதனால் துபாய் கைவிடப்பட்ட நகரம் போல, கோஸ்ட் சிட்டியாக மாறியிருக்கிறது.
-
அடுத்தடுத்து நிலநடுக்கம்.. காலையிலேயே குலுங்கிய ஈரான்.. கியூபாவில் 150 ஆண்டுகளில் இல்லாத அதிர்வு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
ஹார்முஸ், பாப் அல்-மண்டெப் இரண்டையும் மூடிய ஈரான்..? மொத்த வர்த்தகமும் முடக்கம்.. உலக நாடுகள் ஷாக் -
இஸ்ரேல் - ஈரான் இடையில் திடீர் போர் நிறுத்தம்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிரடி அறிவிப்பு! -
இஸ்ரேல் கப்பலை கண்டதும் சுட உத்தரவு.. பாப் அல்-மன்டெப் கண்ட்ரோலில் எடுக்கும் ஹவுதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி?












Click it and Unblock the Notifications