கடைசி மேட்சில் பேட்டிங் இறங்காதது ஏன்? கோலி சொன்ன உருகவைக்கும் காரணம்.. என்ன மனுஷன்யா!
துபாய்: நேற்று நமீபியா அணிக்கு எதிராக இந்திய அணி ஆடியதுதான் கேப்டனாக கோலி அணியை வழி நடத்திய கடைசி போட்டியாகும். இனி டி 20 போட்டிகளில் அவர் கேப்டனாக ஆட மாட்டார்.
Recommended Video
2021 டி 20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாகவே டி 20 கேப்டன் பதவியில் இருந்து கோலி பதவி விலகிவிட்டார். அதேபோல் இந்திய அணியின் பயிற்சியாளர்களுக்கு ராஜினாமா செய்துவிட்டனர்.
இந்திய அணி இனி வரும் போட்டிகளில் ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் ஆட உள்ளது. அதேபோல் இந்திய டி 20 அணிக்கு ரோஹித் அல்லது ராகுல் கேப்டனாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேப்டன்
அதேபோல் வொயிட் பால் ஆட்டங்களில் கோலியின் கேப்டன்சி விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. இதனால் 50 ஓவர் போட்டிகளில் இருந்தும் கேப்டன் பதவியை கோலி ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 50 ஓவர் மற்றும் 20 ஓவர் ஆகிய இரண்டு தொடர்களிலும் இந்திய அணிக்கு ஒரே கேப்டனாக புதிய வீரர் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

ஆடவில்லை
இந்த நிலையில் கேப்டனாக நேற்று போட்டியில் கோலி பேட்டிங் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நேற்று ரோஹித் அவுட் ஆன பின் கோலிதான் களமிறங்கி இருக்க வேண்டும். நேற்று முதலில் இறங்கிய நமீபியா 132-8 ரன்கள் எடுத்தது. அதன்பின் இந்திய அணியில் ராகுல் 54, ரோஹித் 56, சூர்யா குமார் 25 ரன்கள் எடுத்து 15.2 ஓவரில் இந்திய அணி வெற்றிபெற்றது.

கோலி
நேற்று கேப்டனாக கடைசி போட்டியில் கோலி பேட்டிங் இறங்கவில்லை. ரசிகர்கள் பலருக்கும் இது அதிர்ச்சியை அளித்துள்ளது. கோலி ஏன் ஒன் டவுன் இறங்கவில்லை. கேப்டனாக அவர் களத்திற்கு வந்து இருக்கலாமே, ஆட்டத்தை முடித்து இருக்கலாமே என்று பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு கோலி நேற்று செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்தார்.

பதில்
கோலி அளித்த பதிலில், இந்த தொடரில் சூர்யா குமார் யாதவ் நிறைய போட்டிகளில் ஆடவில்லை. அவர் நன்றாக ஆட கூடியவர். இளம் வீரர். அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் அவர் எனக்கு முன்பாக இறங்கினார். அவருக்கு இது முதல் உலகக் கோப்பை தொடர். அவர் இந்த தொடருக்கு பின்பாக வீட்டிற்கு செல்லும் போது நல்ல நினைவுகளோடு செல்ல வேண்டும். அதனால்தான் அவரை களமிறக்கினேன் என்று குறிப்பிட்டார்.

உருக்கம்
கோலி சக வீரர் ஒருவருக்காக கடைசி போட்டியில் பேட்டிங் இறங்காதது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் சூர்ய குமாருடன் ஐபிஎல் சமயத்தில் கோலி சண்டை எல்லாம் போட்டார். அதன்பின் இருவரும் நண்பர்கள் ஆனது வேறு கதை. அப்படிப்பட்ட நிலையில் சூர்யகுமாருக்காக கோலி தனது கடைசி கேப்டன்சி போட்டியில் பேட்டிங்கை விட்டுக்கொடுத்து பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications