தமிழக வீரரை தனியாக அழைத்து சென்ற தோனி.. மொத்த டீமும் எடுத்த தேவையில்லாத ரிஸ்க்.. ஏகப்பட்ட குழப்பம்!
துபாய்: நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி ஆடும் டி 20 உலகக் கோப்பை போட்டியில் கேப்டன் கோலி ஏகப்பட்ட மாற்றங்களை செய்துள்ளார். அணிக்குள் இது சில விதமான குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை டி 20 லீக் ஆட்டத்தில் இந்தியா ஆடி வருகிறது. இதில் எப்படியாவது டாஸ் வெல்ல வேண்டும் என்பதில் இந்திய அணி உறுதியாக இருந்தது.
ஆனால் டாஸ் தோல்வி அடைந்த இந்திய அணி இந்த முறையும் முதலில் பேட்டிங் இறங்கியது. இந்திய அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது.

மாற்றம்
இந்திய அணிக்குள் இன்று சூர்ய குமார் யாதவ் ஆடவில்லை. காயம் காரணமாக அவர் ஆடவில்லை. மாறாக இஷான் கிஷான் களமிறங்கினார். அதேபோல் புவனேஷ்வர் குமார் இன்று அணியில் இருந்து நீக்கப்பட்டார். மாறாக அணிக்குள் இன்று ஷரத்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டார்.

தமிழ்நாடு வீரர்
அணி டாஸ் தோல்வி அடைந்ததும் பவுலர்கள் மீது கவனம் சென்றது. இந்திய அணி இன்று நன்றாக பவுலிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் டாஸ் தோல்வி அடைந்ததும் தமிழ்நாடு வீரர் வருண் சக்ரவர்த்தியை அழைத்து சென்று தோனி தனியாக பேசிக்கொண்டு இருந்தார். ட்யூவில் பவுலிங் செய்வது குறித்தும், விக்கெட் எடுப்பது குறித்தும் இவர் பேசி இருக்க வாய்ப்பு உள்ளது.

பேட்டிங் ஆர்டர்
இந்திய அணி இன்று பேட்டிங் ஆர்டரை மாற்றி தேவையில்லாத ரிஸ்க் எடுத்தது. தேவையின்றி இன்று இஷான் கிஷான் - ராகுல் ஓப்பனிங் இறங்கினார்கள். இஷான் அணிக்குள் வந்தால் ராகுல் 4வதாக இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று கிஷான் - ராகுல் ஓப்பனிங் இறங்கினார்கள். இவர்களுக்கு இடையில் நல்ல கெமிஸ்ட்ரி இல்லை.

குழப்பம்
ரன் ஓடுவது தொடங்கி இதில் இரண்டு பேருக்கும் ரிதம் இல்லை. தேவையின்றி ஒன்றிரண்டு முறை அவசரமாக ஓடி இஷான் கிஷான் பயமுறுத்தினார். இதனால் ஒரு பவுண்டரி அடித்த கையோடு அவர் 4 ரன்களுக்கு அவுட்டானார். இன்னொரு பக்கம் ராகுலும் கொஞ்சம் வேகம் எடுத்த உடன் 18 ரன்களுக்கு அவுட் ஆனார். ஒன் டவுன் இறங்கிய ரோஹித் சர்மா தொடக்கத்தில் இருந்தே திணறினார்.

ரிதம் இல்லை
முதல் பந்திலேயே இவர் அவுட்டாக வேண்டியது. ஆனால் கேட்ச் விடப்பட்ட காரணத்தால் எஸ்கேப் ஆனார். அதன்பின் கொஞ்சம் அதிரடி காட்டினாலும் 14 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். டாப் 3 வீரர்கள் யாருக்குமே ரிதம் இன்று இல்லை. திணறலாக ஆடிக்கொண்டு இருந்தனர். இன்றைய ஆட்டத்தில் பேட்டிங் ஆர்டரில் இந்திய அணி ஏகப்பட்ட மாற்றங்களை செய்துள்ளது. அணிக்குள் இது சில விதமான குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.

ரிஸ்க்
ஒருவேளை இன்று ரோஹித் - இஷான் ஓப்பனிங் இறங்கி இருந்தால் நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும். அதேபோல் இஷான் அல்லது ராகுல் மிடில் ஆர்டரில் வந்து இருந்தாலும் ஆட்டம் வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால் தேவையில்லாத டெஸ்ட்களை செய்து குழப்பம் செய்தது இந்திய அணிக்கு எதிராக திரும்பி உள்ளது. அதீத சோதனை முயற்சி இந்திய அணிக்கு எதிராக திரும்பி உள்ளது.












Click it and Unblock the Notifications