கோலி கூட தேவைப்படல.. டேஞ்சரஸ் டீம் இந்தியா.. கப் அவுங்களுக்குதான்: பாகிஸ்தான் ஜாம்பவான் இன்சமாம்

Subscribe to Oneindia Tamil

துபாய்: தற்போதைய நிலையில், உலகின் ஆபத்தான டி20 கிரிக்கெட் அணி இந்தியாதான் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான், இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின்போது விராட் கோலி பேட் செய்யாமலேயே, எளிதாக இந்தியா வெற்றி பெற்றதை இன்சமாம் உல் ஹக் சுட்டிக் காட்டியுள்ளார்.

உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணி இந்தியாதான் என்றும் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

 இன்சமாம் உல் ஹக் கருத்து

இன்சமாம் உல் ஹக் கருத்து

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் மற்றும் அந்த அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் முன்னாள் பயிற்சியாளர் இன்சமாம், சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் கிரிக்கெட் தொடர்பான தனது கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைப்பது வழக்கம். உலக கோப்பை கிரிக்கெட் தொடர்பாக அவர் தனது கருத்துக்களை யூடியூப் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

கணிக்க முடியாது

கணிக்க முடியாது


அதில் அவர் கூறுகையில், எந்த ஒரு போட்டித் தொடரிலும் ஒரு குறிப்பிட்ட அணி தான் கோப்பையை வெல்லும் என்று முதலிலேயே கணிக்க முடியாது. அந்த போட்டிகளில் அந்த அணி எவ்வாறு ஆடுகிறது என்பதை பொறுத்து போட்டியின் ரிசல்ட் கிடைக்கும். அதேநேரம், எந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதை முன்கூட்டியே கணிக்க முடியும்.

இந்திய அணிக்கு சான்ஸ்

இந்திய அணிக்கு சான்ஸ்

அப்படி பார்த்தால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மைதானங்கள் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். 20 ஓவர் உலக கோப்பையை வெல்வதற்கு மற்ற எந்த ஒரு அணியை விடவும் இந்திய அணிக்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த அணியில் மிகச் சிறந்த அனுபவம் வாய்ந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரர்கள் பலர் உள்ளனர்.

Recommended Video

    T20 World Cup: Pakistan அணியை பங்கமாய் கலாய்த்த Sehwag | Oneindia Tamil
    விராட் கோலி பேட்டிங் செய்யவில்லை

    விராட் கோலி பேட்டிங் செய்யவில்லை

    பயிற்சி ஆட்டத்தின்போது, ஆஸ்திரேலியா நிர்ணயித்த 153 ரன்கள் இலக்கை விராட் கோலி பேட்டிங்கை செய்யாமலேயே எளிதாக துரத்திப் பிடித்து வெற்றி பெற்றது இந்திய அணி. இதிலிருந்து அந்த அணி எவ்வளவு வலிமையாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். ஐக்கிய அரபு எமிரேட் மைதானங்களில் சூழ்நிலையை வைத்து பார்த்தால் தற்போது உலக 20 ஓவர் கிரிக்கெட் அணி களிலேயே மிகவும் ஆபத்தான அணி இந்திய, கிரிக்கெட் அணிதான்.

    பைனல் போட்டி மாதிரி

    பைனல் போட்டி மாதிரி

    வரும் ஞாயிற்றுக்கிழமை சூப்பர்-12 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் சந்திக்க உள்ளன. இந்த போட்டி பற்றி மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள், லீக் மற்றும் இறுதிப் போட்டியில் மோதின. இரண்டு போட்டிகளும் இறுதிப்போட்டிகள் போலத்தான் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பொதுவாக ஒரு தொடரில் இறுதிப் போட்டி என்று ஒன்று இருக்கும். ஆனால் இந்தியா பாகிஸ்தான் மோதினால் அதுவும் ஒரு இறுதிப்போட்டி போலத்தான் ரசிகர்களால் டென்ஷனோடு பார்க்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

     நடந்தது என்ன?

    நடந்தது என்ன?

    இன்சமாம் உல் ஹக் குறிப்பிட்ட, 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் போட்டி தொடரில் முதல் லீக் போட்டியில் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது என்பது நினைவிருக்கலாம். ஆனால் அப்போது இருந்த பாகிஸ்தான் அணியை விட இப்போதைய பாகிஸ்தான் அணி வீக். ஆனால் அப்போதைய இந்திய அணியை விட இப்போதைய இந்திய அணி பல மடங்கு ஸ்ட்ராங். இப்போதைய இந்திய அணி, இன்சமாம் அனுபவத்தில் கண்டுணர்ந்த இந்திய அணி இல்லை. அதாவது சச்சின், கங்குலி போன்ற ஒரு சில வீரர்கள் ரன் அடித்தால் மட்டுமே வெல்லும் அணியில்லை. சில வருடங்கள் முன்புவரை விராட் கோலி ரன் அடித்தால்தான் வெல்ல முடியும் என்ற நிலையில் இருந்த அணியும் இல்லை. இது பழைய காலத்து ஆஸ்திரேலிய அணி போல. யார் அவுட்டானாலும் இல்லாவிட்டாலும் பிற வீரர்கள் வெற்றிக்கு தேவையான ரன்களை குவிக்க கூடிய அணி இப்போதைய இந்திய அணி. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவையே, பயிற்சி ஆட்டங்களில் ஊதி தள்ளிவிட்டது இந்திய அணி என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+