பாஸ்போர்ட் விதிகளில் மேஜர் மாற்றம்.. துபாய் வாழ் இந்தியர்கள் "இதை" கண்டிப்பாக செய்யணும்! முக்கிய அறிவிப்பு
துபாய்: இந்தியர்கள் பல லட்சம் பேர் துபாயில் வசித்து, வேலை செய்து வருகிறார்கள். குறிப்பாக தென்னிந்தியாவில் இருந்து அதிகப் பேர் துபாய் செல்கிறார்கள். இதற்கிடையே துபாயில் வாழும் இந்தியர்கள் புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கோ அல்லது தங்கள் பழைய பாஸ்போர்ட்டை விண்ணப்பிக்கப் புதிய ரூல்ஸ் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகள் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுபோல வெளிநாட்டவர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் ஒன்றாக ஐக்கிய அமீரகம் இருக்கிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் இருந்து துபாய், அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அமீரக நாடுகளுக்கு அதிகப் பேர் செல்கிறார்கள்.

துபாய் வாழ் இந்தியர்கள்
இதற்கிடையே துபாயில் வாழும் இந்தியர்கள் புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கோ அல்லது தங்கள் பழைய பாஸ்போர்ட்டை விண்ணப்பிக்கப் புதிய ரூல்ஸ் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது பாஸ்போர்ட் பெற அல்லது விண்ணப்பிக்கப் புதிய புகைப்பட விதிகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்த விதிகள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய உத்தரவு
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் தரநிலைகளின்படி எடுக்கப்பட்ட போட்டோக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என துபாயில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த விதிகள் ஆகஸ்ட் 25ம் தேதி வெளியிடப்பட்டன. இதன் மூலம் இந்திய பாஸ்போர்ட்டுகள் உலகளாவிய பயோமெட்ரிக் தேவைகளுக்கு இணையாகின்றன.
இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் உத்தரவுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களுக்கு பாஸ்போர்ட் சேவா போர்டல் வழியாக இந்த உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. இனிமேல் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்போர் அல்லது அதைப் புதுப்பிக்க விரும்புவோர் புதிய விதிமுறைகளுக்கு இணங்க போட்டோக்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.
கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்
முன்பு போட்டோக்களில் பெரிய கெடுபிடிகள் இல்லாமல் இருந்தது. ஆனால், இப்போது நிச்சயம் ICAO ரூல்ஸ் இணையாக அந்த போட்டோக்கள் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவை பாஸ்போர்ட்டுகள் இயந்திரத்தால் ரீட் செய்யக்கூடியதாகவும், சர்வதேச தரத்திலும் இருக்கும்.
கட்டுப்பாடுகள்
- பார்மெட்: வெள்ளை நிறப் பேக் கிரவண்டில் கலர் போட்டோ.. சைஸ் 630 x 810 பிக்சல்கள்!
- ஃபிரேம்: தலை மற்றும் தோள்கள் நெருக்கமாகத் தெரிய வேண்டும்; 80-85% இடத்தில் முகம் மட்டுமே தெரிய வேண்டும்.
- கிளாரிட்டி: ஃபில்டர், எடிட் அல்லது பிளர் எதுவும் இருக்கக்கூடாது.. இயல்பான தோல் நிறம் தெரிய வேண்டும்.
- லைடிங்: போட்டோ சீரான பிரகாசமாக இருக்க வேண்டும்.. நிழல், பளபளப்பு இருக்கக்கூடாது.
- எப்படி இருக்க வேண்டும்: கண்கள் திறந்திருக்க வேண்டும்; வாய் மூடியிருக்க வேண்டும்; தலைமுடி கண்களை மறைக்கக் கூடாது; முகம் நேராக இருக்க வேண்டும்.
- கண்ணாடிகள்: கண்ணாடிகளை அகற்ற வேண்டும்.. மத காரணங்களுக்காக மட்டுமே தலைப்பாகை அனுமதிக்கப்படும், ஆனால் முழு முகமும் தெரிய வேண்டும். சுமார் 1.5 மீட்டர் தூரத்திலிருந்து போட்டோ எடுக்கப்பட வேண்டும்.
ரூல்ஸ் முக்கியம்
இந்திய பாஸ்போர்ட்டுகளின் பாதுகாப்பைப் பலப்படுத்தவே இதுபோல ஐசிஏஓ பாதுகாப்பு தரநிலைகளுக்கு இணையான போட்டோக்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குவைத் உள்ளவை உட்படப் பிற நாடுகளில் ஏற்கனவே இந்த ரூல்ஸ் கொண்டு வரப்பட்டுள்ளது. அபுதாபியும் விரைவில் இந்த நடைமுறை கொண்டு வரப்பட இருக்கிறது.
இப்போது துபாயில் இந்த ரூல்ஸ் அமலுக்கு வரும் சூழலில் விண்ணப்பத் தாமதங்கள் அல்லது நிராகரிப்புகளைத் தவிர்க்க, இந்த புதிய விதிகளைச் சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications