கூரையை பிய்த்துக் கொண்டு விழுந்த யோகம்.. கேரள நபருக்கு அடித்த ரூ.60 கோடி! தலைவிதியை மாற்றிய சம்பவம்
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் வசித்து வரும் கேரள நபர், அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரியில் ரூ.60 கோடி பரிசுத்தொகை வென்றுள்ளார். கடல் கடந்து பிழைப்புக்காக போன இடத்தில் அதிர்ஷ்டம் அடித்ததில் ஒரே நாளில் பல கோடிகளுக்கு அதிபதியாகியிருக்கிறார் கேரளாவை சேர்ந்த அஷிக் பதின்ஹராத் என்பவர். லாட்டரியில் பரிசு அடித்த அவர் பரிசுத்தொகையை யாருக்கும் பகிர்ந்து அளிக்க மாட்டேன் என்றும் சொல்லியிருக்கிறார்.
கேரளாவை சேர்ந்தவர் அஷிக் பதின்ஹாரத். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் 19 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். அவ்வப்பொது சொந்த ஊருக்கு சென்று விட்டு வரும் அஷிக் பதின் ஹாரத்திற்கு, கேரளாவில் விற்கப்படும் லாட்டரியை பார்த்து அபுதாபி லாட்டரியை வாங்கும் ஆசை ஏற்பட்டு இருக்கிறது. ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அஷிக், அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக டிக்கெட் வாங்கி வந்து இருக்கிறார்.

ஆனால் ஒரு முறை கூட அவருக்கு லாட்டரியில் பரிசு அடித்தது இல்லை. ஆனாலும் என்னைக்காவது ஒரு நாள் அதிர்ஷ்டம் அடிக்கத்தான் போகிறது என நினைத்துக்கொண்டே, விடாமல் லாட்டரியை வாங்கினாராம். இதுவரை 100 லாட்டரிக்கு மேல் வாங்கிய அவருக்கு ஒருமுறை கூட பரிசு விழாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் தான், கடந்த 29 ஆம் தேதி அஷிக் வாங்கிய லாட்டரிக்கு 60 கோடி ரூபாய் பரிசு அடித்துள்ளது.
60 கோடி ரூபாய் பரிசு
அஷித் ஆன்லைனில் லாட்டரியை வாங்கியிருக்கிறார். 1000 திர்ஹாம் மதிப்புக்கு 4 டிக்கெட்டுகளை வாங்கியிருக்கிறார். வழக்கம் போல இந்த லாட்டரியிலும் நமக்கு பரிசு அடிக்கப் போவது இல்லை. பிறகு ஏன் எதிபார்த்துட்டு இருக்கனும்.. என எண்ணிய அஷிக், பெரிதாக எதிபார்ப்பு இல்லாமல் தனது வழக்கமான பணியில் ஈடுபட்டு இருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக கோழிக்கோட்டில் உள்ள தனது குடும்பத்தினருடன் போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, அஷிக்கிற்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.
புது எண்ணாக இருக்கிறதே என நினைத்துக்கொண்டு அந்த அழைப்பை ஏற்று பேசியிருக்கிறார். அப்போதுதான் அவருக்கு லாட்டரியில் பரிசு விழுந்து இருப்பதாக குலுக்கல் நடத்தியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் போலி அழைப்புகளாக இருக்கும் என நினைத்தவருக்கு பிறகு எண்ணை உறுதி செய்த பிறகுதான் உண்மையில் பரிசுத்தொகை அடித்ததை உணர்ந்து இருக்கிறார். இந்திய மதிப்பில் ரூபாய் 60 கோடி பரிசு விழுந்துள்ளதால் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார் அஷிக்.
தொடர்ந்து லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குவேன்
தனக்கு விழுந்து இருக்கும் பரிசை யாருக்கும் பகிர மாட்டேன் என சொல்லியிருக்கும் அஷிக் கூறியிருப்பதாவது:- நான் வாங்கிய ஆறு டிக்கெட்டுகளில் 456808 என்ற எண் கொண்ட லாட்டரிக்கு முதல் பரிசு அடித்தது. இவ்வளவு பெரிய தொகை பரிசாக கிடைக்கும் என நினைத்து கூட பார்க்கவில்லை. பரிசாக கிடைத்த பணத்தை வைத்து ரியல் எஸ்டேட் துறையில் கால் பதிக்க இருக்கிறேன். எனக்கு பரிசுத்தொகை அடித்து இருப்பதால் எனது மனைவியும் மூன்று குழந்தைகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நான் தொடர்ந்து லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவேன். இதுவரை ஒருமுறை கூட பரிசு அடிக்காதவர்கள் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். ஒரு நாள் நிச்சயம் பரிசு அடிக்கும்" என்று கூறியுள்ளார். கேரள நபருக்கு அபுதாபி லாட்டரியில் பல கோடி பரிசுத்தொகை அடித்து இருக்கும் தகவல் சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.
நெட்டிசன்ஸ் அட்வைஸ்
சில நெட்டிசன்கள் அவரது அட்வைசையும் விமர்சித்துள்ளனர். அதாவது, ஒருநாள் கண்டிப்பாக லாட்டரி அடிக்கும் என எந்த உத்தரவாதமும் கிடையாது. பல ஆண்டுகளாக லாட்டரி வாங்கி பணத்தை இழந்தவர்கள்தான் இங்கு அதிகம். இதுவும் ஒரு சூதாட்டம் தான். எனவே லாட்டரியில் கண் மூடித்தனமாக பங்கு பெற்று பணத்தை இழந்துவிடாதீர்கள்" என்றும் அட்வைஸ் செய்து இருக்கிறார்கள்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications