தீ விபத்து.. பலியானோர் குடும்பத்துக்கு குவைத் ரூ12.50 லட்சம் வழங்க உத்தரவு
துபாய்: குவைத் தீ விபத்தில் பலியான 46 இந்தியர்கள் உட்பட 50 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ12.50 லட்சம் நிதி உதவி வழங்க (15,000 அமெரிக்க டாலர்) அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு இந்த நிதி உதவியை வழங்குவதற்கான ஏற்பாடுகளை குவைத் அரசு மேற்கொண்டுள்ளதாக தி அராப் டைம்ஸ் செய்தியை மேற்கோள் காட்டி அமீரக திமுக பொறுப்பாளர் எஸ்.எஸ். மீரான் தெரிவித்துள்ளார்.
குவைத் நாட்டின் மன்காஃப் நகரில் 6 மாடி கட்டிடம் ஒன்றில் அண்மையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 46 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களில் 7 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்; 23 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் பலியான தகவலைத் தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் கேவி சிங் உடனடியாக அந்நாட்டுக்கு சென்றார். அங்கிருந்து 46 இந்தியர்களின் உடல்களும் விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் கேரளாவின் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த விமானத்திலேயே மத்திய இணை அமைச்சர் கேவி சிங்கும் கொச்சி வந்தார்.
கொச்சி விமான நிலையத்தில் இருந்து உயிரிழந்தோரின் சொந்த ஊர்களுக்கு உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டன. தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரின் உடல்களை தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெற்றுக் கொண்டு 7 வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடுகளை செய்திருந்தார்.
குவைத் தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு மத்திய அரசு, தமிழ்நாடு அரசு, கேரளா அரசுகள் நிதி உதவிகளை அறிவித்திருந்தன. இந்த நிலையில் குவைத் அரசும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ12.50 லட்சம் நிதி உதவி (15,000 அமெரிக்க டாலர்) வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அரப் டைம்ஸ் நாளிதழ் செய்தியை மேற்கோள் காட்டி அமீரக திமுக பொறுப்பாளர் எஸ்.எஸ். மீரான் தெரிவித்துள்ளார்.
தற்போது குவைத் அரசு, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கான நிதி உதவியை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் இந்த நிதி உதவி அந்த குடும்பங்களைச் சென்றடையும் என்றும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications