ஐக்கிய அரபு அமீரக இந்து கோவில் நிர்வாகிகள் ஏற்பாடு.. கப்பலில் இந்தியாவுக்கு வருகிறது ஆக்சிஜன்
துபாய்: அதிக வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஆக்ஸிஜன் மற்றும் பிற அவசர உதவிகளை வழங்க முடியாமல் மத்திய அரசு போராடி வரும் நிலையில், உலகெங்கிலும் இருந்து பல நல்ல உள்ளங்கள் உதவிக்கு வந்துள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்து கோயிலும் இவ்வாறு இந்தியாவுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது.

திங்கள்கிழமை, துபாயின் வடக்கு முனையிலுள்ள ஜெபல் அலி துறைமுகத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஒன்று கூடி, நூற்றுக்கணக்கான சிலிண்டர்களில் திரவ ஆக்ஸிஜனையும், கம்ப்ரஸ் செய்யப்பட்ட ஆக்ஸிஜனின் பெரிய கொள்கலன்களையும், கப்பலில் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர்.
துபாய் ஹீலியம் தொழிற்சாலையின் இந்திய உரிமையாளர்கள், ஆக்ஸிஜன் உற்பத்தியை துவங்கியுள்ளனர். அந்த ஆக்சிஜனை இந்தியாவுக்கு அனுப்பி உள்ளனர்.
இந்தியாவிலிருந்து ஆக்சிஜன் உதவிக்கான கோரிக்கைகள் அதிகரித்த நிலையில், அபுதாபியிலுள்ள, பிஏபிஎஸ் ஸ்ரீ சுவாமி நாராயணன் கோவில் பக்தர்கள் உதவியோடு, இந்த தொழிற்சாலை ஆக்சிஜனை உற்பத்தி செய்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
காவி உடையணிந்த இந்து மத தலைவர்கள், கப்பலில் ஆக்சிஜனை அனுப்பி வைக்கும் முன்பாக, அவற்றின் மீது ரோஜா பூக்களை தூவி ஆசீர்வதித்து, குங்குமம் இட்டு அனுப்பி வைத்தனர்.
ஐக்கிய அரபு நாடுகளில் சுமார் 30 சதவீதம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். இந்த நிலையில்தான், இந்தியா ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவிக்கும் இந்த மோசமான சூழ்நிலையில், தங்களால் முடிந்த உதவிகளை அவர்கள் இந்தியாவுக்குச் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications