சிஎஸ்கே வரிசையா வெற்றி பெற்றிருக்கலாம்.. தோனி பங்களிப்பு சுத்தமா இல்லை.. பிரபல வீரர் பரபரப்பு பேட்டி

Subscribe to Oneindia Tamil

துபாய்: சிஎஸ்கே அணிக்காக இந்த சீசனில் கேப்டன் தோனி எதையும் செய்யவில்லை என்று முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் முதலாவதாக பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது சிஎஸ்கே அணிதான். கடந்த முறை முதல் அணியாக வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், தோனி தலைமையில் மீண்டும் எழுந்து வந்து விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அதேநேரம், தோனி பேட்டிங்தான், நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது.

ரன்கள் இல்லை

ரன்கள் இல்லை

கடந்த ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் தோனி 200 ரன்கள் சேகரித்தார். இம்முறை அதைவிட படுமோசமாக 12 போட்டிகளில் ஆடி 66 ரன்களை மட்டும்தான் எடுத்துள்ளார். பல அணிகளில் பவுலர்கள் கூட இதை விட கூடுதலாக ரன்களை குவித்து வைத்துள்ளனர். அதேநேரம், போன வருடம் தோனி கேப்டன்ஷிப்பும் விமர்சனங்களை எதிர்கொண்டது. ஒரு கட்டத்தில் இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று தோனி கூறும் நிலைமை உருவானது. ஆனால், இந்த சீசனில் தோனி கேப்டன்ஷிப் புகழப்படுகிறது. தொடர் வெற்றிகளே இதற்கு சாட்சி.

டேல் ஸ்டெயின் பேட்டி

டேல் ஸ்டெயின் பேட்டி

இந்த நிலையில்தான், கிரிக்கெட் வெப்சைட் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார் தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவானும், ஆர்சிபி வீரருமான டேல் ஸ்டெயின். அதில் அவர் கூறியிருப்பதாவது: சென்னை டீமின் பாஸ் என்றால் அது தோனிதான். சென்னை பற்றி நாங்கள் யோசித்தாலே, தோனிதான் நினைவுக்கு வருவார். ஏன் தெரியுமா.. இன்னும் சில போட்டிகள் லீக் கட்டத்தில் உள்ளபோதிலே சிஎஸ்கே அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. அதுதான் கேப்டன் தோனியின் செயல்பாடு.

 தோனி பங்களிப்பு இல்லை

தோனி பங்களிப்பு இல்லை

அதேநேரம், சிஎஸ்கே அணிக்காக தோனி பங்களிப்பை பார்க்க முடியவில்லை. அதேநேரம், இறுதிப் போட்டியில் தோனி வெற்றிக்கான் ரன்களை அடித்து வெற்றி பெற வைத்தாலே போதும், அடுத்த சீசனிலும் அவரே சென்னைக்கு விளையாட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அதாவது எத்தனை போட்டிகளில் தோனி ஆடாவிட்டாலும், பைனில் வெற்றிக்கு பங்களிப்பை கொடுத்தாலே போதும் அடுத்த வருடமும் அவர் அணியில்தான் இருக்க வேண்டும் என்று அவரும் அணி நிர்வாகமும் முடிவு செய்வார்கள் என்கிறார் டெயில் ஸ்டெயின்.

சிஎஸ்கே என்றாலே தோனிதான்

சிஎஸ்கே என்றாலே தோனிதான்

கடந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே முதல் அணியாக போட்டித் தொடரிலிருந்து வெளியேறியபோது, தோனி இனி அவ்வளவுதான். ஆட்டத்தை விட்டே விலகிக் கொள்வார் என்று பலரும் பேசினார்கள். ஆனால், நடப்பு சீசனில், பீனிக்ஸ் பறவையாக சிஎஸ்கே மாறியுள்ளது. தோனிதான் இதன் பின்னணியில் இருக்கிறார். பவுலர்கள் மீது இரக்கம் காட்டாத அதிரடி வீரராக தோனி இனியும் இருக்கப்போவதில்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால், சென்னை அணியின் கேப்டனாக தோனியின் செயல்பாட்டை நிரப்ப வேறு யாரும் இல்லை என்பதுதான் நிஜம். சென்னை அணிக்குமே தோனி என்பது ஒரு பிராண்ட்டாக மாறிவிட்டது. உலகம் முழுக்க சென்னை அணி அதிக ரசிகர்களை ஈர்க்க தோனியும், அதன் தொடர் வெற்றியும்தான் முக்கிய காரணங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+