சவுதி இளவரசருக்கு உயிர் பயம்.. ஹவுதிகளுக்கு பயந்து மாறிமாறி சுரங்கத்துக்குள் பதுங்கல்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஹவுதிகளின் தொடர் தாக்குதல் காரணமாக பயந்துபோன சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் சுரங்க வசதிகள் கொண்ட பேலஸ்களில் மாறிமாறி ரகசியமாக தங்குவதாகவும், இந்த பேலஸ்களை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

சவுதி அரேபியா - ஏமன் ஹவுதிகள் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து 4 முறை ஹவுதிகள் தாக்கிவிட்டன. இதுதவிர அபா சர்வதேச விமான நிலையத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

saudi arabia crown prince houthis

கடந்த 10ம் தேதி ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்டுள்ள ஏவுகணை தாக்குதலில் 13 பேர் பலியானதோடு, 300க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் என்பது சவுதி அரேபியாவின் கடந்த 10 ஆண்டு கால வரலாற்றில் மிகவும் மோசமானதாக பதிவாகி உள்ளது.

இதுவரை ஹவுதிகளின் தாக்குதலில் மொத்தம் 19 பேர் சவுதி அரேபியாவில் பலியாகி உள்ளனர். இதற்கிடையே தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஹவுதிகளின் அட்டாக்கால் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரர் முகமது பின் சல்மானுக்கு உயிர் பயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தனது உயிரை காப்பாற்றி கொள்ள சுரங்க வசதி கொண்ட பேலசுக்குள் பதுங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது சவுதி பட்டத்து இளவரசர் அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட பேலசுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேலஸில் சுரங்க வசதிகள் உள்ளன. தற்போது அவர் வசித்து வரும் அந்த பேலஸ் பற்றிய விவரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பேலஸை சுற்றி ஏராளமான பாதுகாவலர்கள் குவிக்கப்பட்டுள்ளன.

இந்த பாதுகாவலர்களை பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானே நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் அவரது முழு நம்பிக்கையை பெற்றவர்கள். அதுமட்டுமின்றி பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. சுரங்க வசதி கொண்ட ஒரு பேலஸில் இருந்து இன்னொரு பேலஸ்க்கு அவர் இடம்பெறுவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த பதுங்கல் காரணமாக தான் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பொதுவெளியில் தோன்றவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த 6ம் தேதி ரத்த தானம் தொடர்பான தேசிய அளவிலான நிகழ்ச்சியில் முகமது பின் சல்மான் பங்கேற்றார். அவர் ரத்த தானம் செய்தேதாடு, நாட்டு மக்களும் ரத்த தானம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதன்பிறகு முகமது பின் சல்மான் பொதுவெளியில் தோன்றவில்லை. இதுவும் அவரது பதுங்கல் செயலை உறுதி செய்யும் வகையில் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+