"அழுதால் நடவடிக்கை".. உலகக் கோப்பையில் ஆடும் ஆப்கான். வீரர்களுக்கு தாலிபான் வார்னிங்.. பின்னணி!
துபாய்: உலகக் கோப்பை டி 20 போட்டியில் ஆடும் ஆப்கானிஸ்தான் அணி வீரர்களுக்கு தாலிபான்கள் கடும் வார்னிங் ஒன்றை கொடுத்துள்ளது.
Recommended Video
2021 உலகக் கோப்பை டி 20 போட்டி தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. இதில் இந்தியாவின் குழுவில் இடம்பெற்று இருக்கும் ஆப்கானிஸ்தான் ஏற்கனவே ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்காக ஆப்கானிஸ்தான் தயாராகி வருகிறது. ஆப்கானிஸ்தான் அணியில் 3 வலுவான ஸ்பின் பவுலர்கள் இருப்பதால் அந்த அணி மற்ற அணிகளுக்கு சவாலானதாக இருக்கும்.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் அணி பெரிய போராட்டத்திற்கு பின்தான் உலகக் கோப்பை டி 20 தொடரில் ஆடி வருகிறது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்த பின் அந்நாட்டின் கொடி தடை செய்யப்பட்டது. தாலிபான்களின் வெள்ளை கொடி தேசிய கொடியாக மாற்றப்பட்டது. ஆனால் ஐசிசி ஆப்கானிஸ்தானின் புதிய கொடிக்கு அனுமதி தரவில்லை. இதனால் ஐசிசிக்கும் தாலிபான்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை
இதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு உலகக் கோப்பை போட்டியில் ஆட வாய்ப்பு மறுக்கப்படுமோ என்ற கேள்வி எழுந்தது. பின்னர் பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கு ஆப்கானிஸ்தான் அணிக்கு உலகக் கோப்பையில் ஆட அனுமதி வழங்கப்பட்டது. அதே சமயம் ஆப்கானிஸ்தான் அணி பழைய கொடியின் கீழ் மற்றும் பழைய தேசிய கீதத்தின் கீழ்தான் ஆட வேண்டும் என்று கூறப்பட்டது.

உத்தரவு
இந்த நிலையில்தான் ஆப்கானிஸ்தான் அணியின் கடந்த போட்டியில் தங்கள் நாட்டின் தேசிய கீதம் ஒளிபரப்பப்பட்ட போது அந்நாட்டு வீரர்கள் கண்ணீர் விட்டனர். கேப்டன் நபி தொடங்கி பல வீரர்கள் கண்ணீர்விட்டனர். ஆட்சி மாற்றம், தாலிபான்களின் கட்டுப்பாடு, மக்கள் மரணம், இனி இந்த தேசிய கீதத்தை கேட்க மாட்டோம் என்ற விரக்தி என்ற பல நிச்சயமின்மைகள் காரணமாக நபி உள்ளிட்ட வீரர்கள் கண்ணீர்விட்டனர்.

உருக்கம்
இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலானது. இணையம் முழுக்க இந்த வீடியோ பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த வீடியோ காரணமாக தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் வீரர்கள் மீது கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில், வீரர்கள் பழைய தேசிய கீதம் பாடப்படும் போதும், கொடி ஏற்றப்படும் போதும் கண்ணீர்விட கூடாது.

நடவடிக்கை
முகத்தில் உணர்ச்சிகளை காட்ட கூடாது. இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாலிபான்கள் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. பழைய தேசிய கீதம், கொடி தடை செய்யப்பட்டுள்ளதால் வீரர்களுக்கு இந்த உத்தரவு சென்றுள்ளது. இதை ஆப்கானிஸ்தான் வீரர்களும் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆப்கான் வீரர்கள்
அதன்படி தாலிபான்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வோம். தேசிய கீதம் பாடும் போது முகத்தில் உணர்வுகளை காட்ட வேண்டாம். நாம் கிரிக்கெட் மீது கவனம் செலுத்துவோம். கடந்த காலம் குறித்தோ, எதிர்காலம் குறித்தோ யோசிக்க வேண்டாம். ஆட்டம் மீது மட்டும் கவனம் செலுத்துவோம் என்று ஆப்கான் வீரர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications