துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

துபாயில் அமீரக திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி 3-ம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி

Google Oneindia Tamil News

துபாய்: அமீரக திமுக சார்பில் துபாயில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி உணர்வெழுச்சியுடன் நேற்று நடைபெற்றது.

UAE DMK Pay tributes to Former CM Karunanidhi On 3rd Death Anniversary

அமீரக திமுக சார்பாக, துபாயில் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் துபாய் லேண்ட்மார்க் பிரிமியர் ஹோட்டலில் நேற்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அமீரக திமுக அமைப்பாளர் எஸ்.எஸ் மீரான் தலைமை வகித்தார்.

UAE DMK Pay tributes to Former CM Karunanidhi On 3rd Death Anniversary

இந்த நிகழ்ச்சியில் கருணாநிதி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தி பேசிய எஸ் எஸ் மீரான், தமிழுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தாம் ஆற்றிய சேவைகளால் மக்களின் மனதில் என்றும் கருணாநிதி நீங்கா இடம் பெற்றுள்ளார். கருணாநிதி அறிவித்து செயல்படுத்திய நல்ல பல திட்டங்களினால் பயன் பெற்ற ஒவ்வொரு குடும்பத்தினரும் கருணாநிதியை என்றென்றும் நினைவில் வைத்திருப்பார்கள் என்றார்.

UAE DMK Pay tributes to Former CM Karunanidhi On 3rd Death Anniversary

"சமூக ஆர்வலர்" பிலால் அலியார் பேசுகையில், திராவிட இயக்கத்திற்கு கருணாநிதி ஆற்றிய பெரும் பங்கினை விரிவாக விளக்கினார். "மகளீர் மட்டும்" அமைப்பின் தலைவர் வஹீதா நஜ்முத்தீன், சமூக ஆர்வலர்கள் ஜெஸிலா ரியாஸ், பிலால் அலியார், அமீரக திமுக செயலாளர் முஸ்தபா , துணை அமைப்பாளர்கள இர்ஷாத், சரத், அமீரக திமுக மூத்த முன்னோடி நஜ்முத்தீன், அமீரக திமுக துணை செயலாளர் மணிமொழியன், அமீரக திமுக நிர்வாகிகளான இளமுருகன, தாரிக் , பாண்டியன் , அமீரக திமுக ஊடகத்துறை செயலாளர் ஏ.ஜி.எம். பிரோஸ் கான் , பொறியாளார் அணி செயலாளர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினர்.

UAE DMK Pay tributes to Former CM Karunanidhi On 3rd Death Anniversary
UAE DMK Pay tributes to Former CM Karunanidhi On 3rd Death Anniversary
English summary
UAE DMK Paid tributes to Former CM Karunanidhi On his 3rd Death Anniversary on Aug 7.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X