குவைத் ஏர்போர்ட் தாக்குதல்.. அமெரிக்காவின் தவறு! ஈரான் பரபர குற்றச்சாட்டு.. மறுக்கும் டிரம்ப்!
குவைத்: குவைத் ஏர்போர்ட் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய ஒருவர் உயிரிழந்தார். ஆனால், இந்த தாக்குதல் முழுக்க முழுக்க அமெரிக்காவின் தவறு என்றும், அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்பு தவறுதலாக ஏர்போர்ட்டை தாக்கிவிட்டது என்றும் ஈரான் குற்றம் சாட்டியிருக்கிறது. இதனை அமெரிக்கா மறுத்துள்ளது.
குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு சேதம் ஏற்பட்டதற்கு அமெரிக்காவின் ஏவுகணைத் தடுப்பு அமைப்பே காரணம் என்ற ஈரானிய கூற்றை அமெரிக்கப் படைத்துறை புதன்கிழமை முற்றிலும் மறுத்துள்ளது. அந்த சேதம் ஈரான் திட்டமிட்டு நடத்திய ட்ரோன் தாக்குதலின் விளைவு என்றும் கூறியிருக்கிறது.

அதாவது, அமெரிக்காவின் 'பேட்ரியாட்' ஏவுகணை தடுப்பு அமைப்புகள் குவைத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. ஈரானின் ஏவுகணை தாக்குதலை தடுக்கவே இந்த அமைப்பு இருக்கிறது. ஆனால், இது தவறுதலாக ஆக்டிவேட் ஆகி, குவைத் விமான நிலையத்தை தாக்கியிருக்கிறது என்பதுதான் ஈரானின் குற்றச்சாட்டு. இரு தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன் வைத்திருப்பதால் உண்மை என்னவென்று இன்னும் முழுமையாக தெரியிவில்லை.
ஈரானின் IRGC அமைப்பு, குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மற்றும் அமெரிக்காவின் 5-வது கடற்படைத் தலைமையகத்தை குறி வைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியதை ஒப்புக்கொண்டுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்க இராணுவம் ஈரானின் கெஷ்ம் தீவில் உள்ள ஈரானிய இராணுவக் கட்டுப்பாட்டு கோபுரங்கள் மற்றும் இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதற்கிடையில்தான் இந்த ஏர்போர்ட் தாக்குதல் நடந்திருக்கிறது. தங்கள் நாட்டு சிவிலியன் உள்கட்டமைப்புகள் மற்றும் தூதரகங்கள் மீது ஈரான் நடத்திய இந்த அத்துமீறிய தாக்குதலுக்குக் குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) உள்ளிட்ட நாடுகள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications