துபாயிலிருந்து தமிழகத்திற்கு நேசக்கரம்... 330 ஆக்சிஜன் உருளைகள் வழங்கிய அமீரகத் தொழிலதிபர்..!
துபாய்: தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அமீரகத் தொழிலதிபர் சாகுல் அமீது என்பவர் தமிழக அரசுக்கு 330 ஆக்சிஜன் உருளைகளை வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் வைக்க தமிழக அரசு மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும், கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களை அதிலிருந்து மீட்டெடுக்கவும் சுகாதாரத்துறை பம்பரமாக சுழன்று வருகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பல மாநிலங்களில் உயிரிழப்புகள் அதிகரித்த நிலையில், ஆட்சிக்கு வந்த முதல் நாள் முதலே ஆக்சிஜன் உற்பத்தி விவகாரத்தில் முழு கவனம் செலுத்த தொடங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரித்தல், மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், என கடந்த ஒரு மாதமாக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகமும் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே கொரோனா நிவாரண நிதியாக தொழிலதிபர்கள் 10 லட்ச ரூபாயில் தொடங்கி 10 கோடி ரூபாய் வரை அவரவர் நிறுவனத்தின் சக்திகேற்ப நிதி உதவி வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவரும், நோபல் மெரைன் நிறுவனத்தின் தலைவருமான அமீரகத் தொழிலதிபர் சாகுல் ஹமீது என்பவர் ரூ.50 லட்சம் மதிப்பிலான 330 ஆக்சிஜன் உருளைகளை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இது முறையாக தமிழக அரசை வந்தடைந்துவிட்ட நிலையில் அதற்கான அத்தாட்சி கடித்தத்தை அரசிடமிருந்து பெற்ற வழக்கறிஞர் இம்ரான் கான், அதனை திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் காட்டி விவரத்தை எடித்துக் கூறியிருக்கிறார். இதையடுத்து பேரிடர் நேரத்தில் ஆக்சிஜன் உருளைகள் வழங்கி உதவியதற்காக உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications