உடைந்து விடுவார் என நினைத்தவர்களுக்கு கரி பூசி கோலி செய்த சம்பவம்!பாக். கிரிக்கெட் வாரியம் பாராட்டு
துபாய்: என்னதான் பதற்றத்தோடு விளையாடி பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி கோட்டை விட்டிருந்தாலும், போட்டி முடிவில் கேப்டன் விராட் கோலி மற்றும் ஆலோசகர் தோனி ஆகியோர் செயல்பட்ட விதம் பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய உலக கோப்பை 20 ஓவர் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
முதல் முறையாக உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்றது. எனவே இது ரசிகர்களை வெகுவாக அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

ஆதங்கம்
ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் ஆதங்கம், கோபங்களை வெளிப்படுத்தியதை பார்க்க முடிந்தது. ஆனால், எப்போதுமே உணர்ச்சிவசப்படும் விராட் கோலி, இந்த முறை வேறு ஆளாக மாறிப்போயிருந்தார். அவர் கோபத்தையோ, விரக்தியையோ வெளிக்காட்டவில்லை. ஆர்சிபிக்காக ஆடும்போது கூட ரொம்பவே ஆவேசமாக இருக்கும் கோலி, நேற்று பக்குவப்பட்டவராக காட்சியளித்தார்.

பதறிய இந்திய பேட்ஸ்மேன்கள்
ரோகித் ஷர்மா, ராகுல், சூர்யகுமார் யாதவ் என பல வீரர்களும் வரிசையாக பதற்றத்தோடும், நெருக்கடியோடும் ஆடி அவுட்டாகி வெளியேறிய நிலையில், விராட் கோலி அப்படி ஆடவில்லை. அவர் ஒரு சாம்பியனை போல விளையாடினார். அதிலும் அச்சுறுத்திய பவுலர் ஷகீன் அப்ரிடி பந்து வீச்சை கிரீசை விட்டு இறங்கி வந்து லாங் ஆன் திசையில் அவர் அடித்த சிக்சரை எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப திரும்ப பார்க்கலாம். அத்தனை அழகு, அத்தனை பவர், அத்தனை அத்தாரிட்டி. உங்க மாயாஜாலம் என்னிடம் பலிக்காது என்று சொல்லியடித்ததை போல இருந்தது அந்த ஷாட்.
Recommended Video

சச்சின் அடித்த சிக்சரை போல
எம்ஆர்எப் பேட்டிலிருந்து பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பையில் வரும் சிக்சர் எப்போதுமே ஸ்பெஷல்தான். 2003ம் ஆண்டு உலக கோப்பையின்போது ஷோயிப் அக்தர் பந்தை ஆப் சைடில் சிக்சருக்கு விளாசிய சச்சினின் அந்த ஷாட் எப்படி உலக பிரசித்தி பெற்றதோ, அதேபோல இப்போது விராட் அடித்த இந்த சிக்சரும் புகழப்படுகிறது. இருவருமே கையில் வைத்திருந்தது எம்.ஆர்.எப் பேட்தான் என்று நெகிழ்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.

விராட் கோலி டாப்
மொத்த இந்திய அணியிலும் மிகச் சிறப்பாக ஆடியது விராட் கோலிதான். அவருக்கு ரிஷப் பண்ட் கை கொடுத்தார். விராட் கோலி பதற்றமோ ஆவேசமோ இன்றி விளையாடி, பார்ம்தான் தற்காலிகமானது, கிளாஸ் எப்போதுமே என்னோடு இருக்கும் என்பதை நிரூபித்தார்.

தட்டிக் கொடுத்த விராட்
இந்த நிலையில்தான், பாகிஸ்தான் வெற்றி பெற்ற பிறகும் கூட, விராட் கோலி உடைந்து போகவில்லை. ஆர்சிபி தோற்றால் கூட கவலைப்படும் கோலி, இந்த முறை அசரவில்லை. பக்குவப்பட்ட கிரிக்கெட் வீரராக தெரிந்தார். வெற்றிக்கான ரன்களை பாகிஸ்தான் கடந்ததும், களத்தில் நின்ற பாபர் ஆசம் மற்றும் ரிஸ்வான் ஆகியோருக்கு கை கொடுத்தார் விராட் கோலி. அதிலும் ரிஸ்வானை தனது நெஞ்சோடு சாய்த்துக் கொண்டு தலையில் தட்டிக் கொடுத்தார். இதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ட்விட்டர் பக்கத்தில் படம் போட்டு பாராட்டியுள்ளது. அதேநேரம், இதன் மூலம், இந்த தோல்வியை நாங்கள் பெரிதாக எடுக்கவில்லை என்ற மெசேஜை பாகிஸ்தான் ரசிகர்களுக்கு கொடுத்தார். கோலி உடைந்து விடுவார் என்று எதிர்பார்த்த சில பாகிஸ்தான் ரசிகர்களுக்கு அது ஏமாற்றம்தான். மேலும், இரு வீரர்களையும் தட்டிக் கொடுத்ததன் மூலம், நான்தான் பெரியண்ணன் என்ற அத்தாரிட்டியை அவர்களுக்கு காட்டினார் கோலி.

சச்சினுக்கு பிறகு விராட் கோலி
ஆம்.. பாபர் ஆசம் உட்பட பாகிஸ்தானின் பல வீரர்களும் விராட் கோலியோடுதான் அந்த நாட்டு ரசிகர்களால் ஒப்பிடப்படுகிறார்கள். முன்பு இப்படித்தான், சச்சினோடு, தங்கள் நாட்டு வீரர்களை ஒப்பிடுவார்கள். பாகிஸ்தானின் நிறைய பேட்ஸ்மேன்களும் தங்கள் குருவாக, முன்பு சச்சினையும், இப்போது விராட் கோலியையும்தான் நினைக்கிறார்கள். அந்த இடத்தில் உள்ள கோலி, அதற்கான பெருந்தன்மையை நேற்று வெளிப்படுத்தினார் என்றுதான் சொல்ல வேண்டும்.

தோனி சந்திப்பு
விராட் கோலியை சிறந்த பேட்ஸ்மேன் என்ற வகையில் மதிப்பதை போல பாகிஸ்தானைச் சேர்ந்த பல ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும், சிறந்த கேப்டன் என்ற வகையில், தோனி மீது மதிப்பு வைத்துள்ளனர். நேற்றும் போட்டி முடிந்த பிறகு பாகிஸ்தான் வீரர்கள், இந்திய அணி பயிற்சியாளர் தோனியிடம் சாட்டிங் செய்து கொண்டிருந்தனர். மொத்தத்தில் இந்திய அணியின் ஜாம்பவான்கள் மீது பாகிஸ்தான் வீரர்கள் மதிப்பு வைத்துள்ளதும், இந்திய வீரர்களும் அவர்களோடு நட்பு பாராட்டியதையும் பார்க்க முடிந்தது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications