"பவுலிங் பண்ணு".. கோலியை கூப்பிட்டு ஓவர் போட சொன்ன கேப்டன் ரோஹித்.. பின்னணியில் செம காரணம்
துபாய்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இன்று இந்திய வீரர் கோலி பவுலிங் செய்தார்.
ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உலகக் கோப்பை டி 20 பயிற்சி ஆட்டம் நடந்து வருகிறது. முன்பு இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வென்றது. இந்தியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 188/5 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்தியா 19 ஓவரிலேயே எளிதாக 192/3 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இந்த நிலையில் இன்று ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொண்டது.

இந்தியா
இந்த போட்டியில் முதலில் யார் ஆடுகிறார்கள் என்ற குழப்பம் நிலவி வந்தது. ஏனென்றால் முதலில் வெளியான தகவலின்படி கோலி அணியில் இடம்பெறவில்லை. ரோஹித் சர்மாதான் கேப்டன் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் வெளியான அறிவிப்பில்தான் கோலி இன்று ஆடுவார் என்று கூறப்பட்டது. ஆனாலும் ரோஹித் சர்மாதான் கேப்டன் என்று அறிவிக்கப்பட்டது.

ரோஹித் சர்மாதான் கேப்டன்
இதன் காரணமாக கோலி ரோஹித் கேப்டன்சிக்கு கீழ் பீல்டிங் செய்தார். ரோஹித் சர்மா டி 20 உலகக் கோப்பைக்கு பின் இந்திய அணியின் டி 20 கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று நம்பப்படுகிறது. இன்றும் கூட பிசிசிஐ அதிகாரிகள் சிலர் அளித்த அதிகாரபூர்வமற்ற பேட்டியில் ரோஹித் சர்மாதான் இந்தியாவின் டி 20 கேப்டன் இனி என்று கூறி இருந்தனர்.

கோலி
இந்த நிலையில்தான் இன்று ரோஹித் சர்மா கேப்டன்சிக்கு கீழ் கோலி ஆடினார். இதில்தான் புதிய திருப்பமாக திடீரென கோலியை அழைத்து ரோஹித் பவுலிங் செய்ய சொன்னார். யாருமே எதிர்பார்க்காத வகையில் கோலியை கூப்பிட்டு பவுலிங் போடுங்கள் என்று கூறினார். அதன்பின் கோலியும் சிறப்பாக பவுலிங் செய்தார்.

கோலி பவுலிங்
கோலியின் அந்த ஓவரில் ஸ்மித் பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். கோலி வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து சிறப்பாக பவுலிங் செய்தார். இந்திய அணியின் 5வது பவுலராக ஹர்திக் பாண்டியா ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இவர் 4 ஓவர்களை முழுமையாக வீச வாய்ப்பு குறைவு. அவர் முழு பவுலிங் பிட்னஸில் இல்லை. இதனால் 6வது பவுலரை களமிறக்கும் முடிவில் இந்திய அணி இருப்பதாக தெரிகிறது.

ரோஹித் சர்மா பேச்சு
இன்று போட்டிக்கு முன்பாக பேட்டி அளித்த ரோஹித் சர்மாவும், இந்திய அணியில் நன்றாக பவுலிங் போட கூடிய நிலையில் 5 பவுலர்கள் உள்ளனர். ஆனால் ஆறாவது பவுலிங் ஆப்ஷன் தேவைப்பட்டால் நான், கோலி அல்லது சூர்யா குமார் யாதவ் பவுலிங் செய்வார்கள் என்று ரோஹித் கூறினார். அதேபோல்தான் இன்று கோலி பவுலிங் செய்தார்.
Recommended Video

வருண்
13வது ஓவரை மீண்டும் இன்று கோலி வீசினார். இதனால் இந்தியா டி 20 உலகக் கோப்பையில் அவரை 6வது பவுலராக களமிறக்க வாய்ப்பும் உள்ளது. அதே சமயம் இன்று வருண் சக்ரவர்த்தியை களமிறக்க கூடாது, அவரை பவுலிங் செய்ய வைத்து ஆஸ்திரேலியாவிற்கு பயிற்சி கொடுக்க கூடாது என்பதால் 6வது பவுலரை இந்திய அணி பயன்படுத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications