அவ்ளோதான் டைம் ஓவர்! அடுத்து வரப்போகிற ஷாக் பயங்கரமாக இருக்கும்! இஸ்ரேலுக்கு ஈரான் பகிரங்க வார்னிங்
டெஹ்ரான்: இன்று அதிகாலை சிரியாவில் உள்ள ஈரானிய தூதரகம் அதன் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் "உங்கள் நேரம் முடிந்தது" என்று பதிவிட்டுள்ளது. இஸ்ரேல் காஸாவில் உள்ள மருத்துவமனை மீது தாக்குதல் நடத்திய நிலையில் இந்த போஸ்டை ஈரான் போட்டுள்ளது.
இதனால் போர் உச்சகட்டத்தை அடையுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. நூற்றுக்கணக்கான "நிராயுதபாணி மற்றும் பாதுகாப்பற்ற மக்களை" கொன்று காயப்படுத்தி உள்ளது இஸ்ரேல். காசா பகுதியில் மருத்துவமனையைத் இஸ்ரேல் தாக்கியதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று ஈரான் தெரிவித்துள்ளது.

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக இஸ்ரேலிய அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இஸ்ரேல் நாடு இதற்கு பதில் சொல்லியே ஆகி வேண்டும், என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறினார். இஸ்ரேலின் நேர்மை முடிந்துவிட்டது. கடுமையான பதிலடியை அவர்கள் சந்திக்க போகிறார்கள்.
மிகப்பெரிய ஷாக் ஒன்று அவர்களை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. அவர்கள் உடனே காசா மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையிலான மோதல் உச்சம் அடைந்துள்ளது. காஸாவை சேர்ந்த ஹெஸ்புல்லா இயக்கம் நடத்திய இஸ்ரேல் மீதான தாக்குதல் காரணமாக தற்போது போர் உச்சம் அடைந்து உள்ளது. இந்த விவகாரத்தில் ஈரான் தற்போது நேரடியாக தலையிட்டு உள்ளது.
ஈரான் தலையீடு; பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவாக ரகசியமாக ஈரான் படைகளை அனுப்பி உள்ளது. இன்னொரு பக்கம் ஈரானின் நேரடி ஆதரவில் ஹெஸ்புல்லா இயக்கம் இந்த போரில் களமிறங்கி உள்ளது. லெபனானில் இருந்து கொண்டு இந்த அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை விட்டுக்கொண்டு இருக்கிறது. ஹிஸ்புல்லா, ஹிஸ்பெல்லா என்று பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இயக்கம் லெபனானில் ஹெஸ்புல்லா என்ற பெயரில் இயங்கி வருகிறது
( இதுதான் ரியல் அரபு வசந்தம்! எல்லை மீறிய இஸ்ரேல்.. சன்னி - ஷியா பிரிவின்றி இணையும் இஸ்லாமிய நாடுகள்!)
சிரியா போர், லெபனான் போர் 2008 என்ற பல்வேறு போர்களில் ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல், அமெரிக்காவிற்கு எதிராக போராடி இருக்கிறது. இந்த நிலையில்தான் தற்போது இவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ஈரான் ஆதரவு கொடுப்பதால்.. இதற்கு பின் ஈரானும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

முக்கியமாக இந்த படைக்கு பண நீதியாக, ஆயுத தளவாட ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக ஈரான் உதவி செய்வதாக கூறப்படுகிறது. ஈரானின் இந்த செயல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை டென்ஷனுக்கு உள்ளாக்கி உள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனையில் ஈரான் தலையிட்டு வரும் நிலையில் ஈரானின் சுப்ரீம் லீடர் அயதுல்லா அலி கமேனி முக்கியமான பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
தாக்குதல்; அதில், இஸ்ரேல் ஆட்சி மீதான தாக்குதலுக்கு திட்டமிட்டவர்களின் கைகளை முத்தமிடுகிறோம். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுடன் ஈரானையும் தொடர்புபடுத்துபவர்கள் தவறாக நினைக்கிறார்கள். நாங்கள் இதில் பங்கேற்கவில்லை. ஆனால் இந்த தாக்குதலை பாராட்டுகிறோம். இதை செய்தவர்கள் துணிச்சலானவர்கள். அவர்கள் செய்தது பெரிய சாதனை.
இது மிகவும் வலிமையான மெசேஜ். இஸ்ரேல் நசுங்கிவிட்டது. இஸ்ரேல் பெரிய அடி வாங்கிவிட்டது. இஸ்ரேல் இனி முன்னேறவே முடியாது. இஸ்ரேல் எழுந்து வர முடியாத அளவிற்கு தாக்குதல் நடத்தி இருக்கிறோம், என்று ஈரானின் சுப்ரீம் லீடர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை தாக்குதல்: இஸ்ரேல் போரின் போரின் ஒரு பகுதியாக காஸாவில் உள்ள Al-Ahly Baptist என்ற மருத்துவமனை மீது ராக்கெட் வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. விமான ரெய்டில் அவர்கள் ராக்கெட்டை ஏவி உள்ளனர். இதில்தான் மருத்துவமனை தாக்கப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் மொத்தம் 600 பேர் வரை பலியாகி உள்ளனர்.
உண்மையான பலி எண்ணிக்கை 800 ஐ தாண்டும். குழந்தைகள், பெண்கள் என்று மருத்துவமனையில் இருந்த எல்லோரும் கொலை செய்யப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்னொரு பக்கம் உள்ளே ஹமாஸ் படைகள் இருந்திருக்கலாம் என்ற நினைப்பில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications