எஸ்பி வேலுமணி உறவினரின் நகைக் கடை.. ஏவிஆர் ஸ்வர்ண மஹாலில் 8 மணி நேரம் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
திருப்பத்தூர்: திருப்பத்தூர் ஏவிஆர் ஸ்வர்ண மஹாலில் சுமார் 8 மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் சோதனை நடைபெற்ற நிலையில் வருமான வரி சம்பந்தமாக 6 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கிருஷ்ணகிரி சாலையில் அமைந்துள்ள ஏ வி ஆர் சுவர்ண மகாலில் தொடர்ந்து சுமார் 8 மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் என்பவருக்கு சொந்தமான ஏ வி ஆர் சொர்ண மஹால் எனும் நகைக் கடை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கிளையாக திருப்பத்தூரில் துவங்கப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் வீடு அலுவலகம் மற்றும் அவரது உறவினர்கள் தொடர்பில் உள்ளவர்கள் என அனைவரிடமும் சுமார் 58 இடங்களில் தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் சோதனை நடைபெற்று வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உறவுக்காரரான சஞ்சய் என்பவரின் திருப்பத்தூர் ஏவிஆர் ஸ்வர்ணமஹால் கிளையில் காலை 7 மணிக்கு தொடங்கப்பட்ட சோதனை தற்போது வரை சுமார் 8 மணி நேரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போது வரை நடைபெற்ற சோதனையில் வருமானவரித் துறை சம்பந்தமாக ஆறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வரும் நிலையில் தற்போது வரை சிக்கிய ஆவணங்கள் மட்டுமல்லாது, மேலும் வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் ரொக்கப் பணம் ஏதேனும் கைப்பற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
