அந்தமான் நிகோபாரை அதிர வைத்த நிலநடுக்கம்..அடுத்தடுத்து 6 முறை கடலுக்குள் அதிர்வு
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று பிற்பகலில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
போர்ட் பிளேர்: அந்தமான் நிக்கோபார் அருகே 6 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.தொடர் நிலநடுக்கம் கரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளனர். ரிக்டர் அளவுகோளில் 4.5 ஆக பதிவானதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் நிக்கோபார் அருகே நிலநடுக்கமானது முதலில் காலை 11 மணிக்கும் பின்பு தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளது.பிற்பகல் 3:02 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 6 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

போர்ட் பிளேரிலிருந்து தென் கிழக்கு திசையில் 193 கிமீ தொலைவில் பிற்பகல் 2.06 மணிக்கு நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கம் கடற்பகுதியில் பதிவானதால் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபார் தீவுகள் மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில் உள்ளதால் இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.
மிக கடுமையான நிலநடுக்கத் தாக்கத்தை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ள பகுதியில் அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளன. கடந்த 2020ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரே நாளில் 5 முறை நில நடுக்கம் பதிவானது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.
இந்த நிலையில் இன்றைய தினம் அடுத்தடுத்து ஆறு முறை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications