ஆரம்பிக்கலாங்களா.. 18 நிமிஷத்தில் 2 கிலோ பிரியாணி ஸ்வாஹா! 170 பேரை தோற்கடித்த பாபு! கமகமத்த ஈரோடு!
ஈரோடு : ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் முன்சீப் கோர்ட் எதிரே உள்ள அரிசி மண்டியின் சார்பில் நடைபெற்ற பிரியாணி சாப்பிடும் பந்தயத்தில் கலந்துகொண்ட வீர்ர் ஒருவர் 2 கிலோ பிரியாணியை 18 நிமிடத்தில் சாப்பிட்டு 3 ஆயிரம் பரிசுத்தொகையை வென்றார்.
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள முன்சீப் கோர்ட் எதிரில் வைரகிரீடம் அரிசி மண்டி கடந்த 1984 ம் ஆண்டுமுதல் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் சார்பில் வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக முன்சீப் கோர்ட் எதிரில் உள்ள அரங்கத்தில் பிரியாணி பந்தயம் நடைபெற்றது.

பிரியாணி பந்தயம்
இந்த 30 நிமிடங்கள் நடைபெறும் இந்த போட்டியில் முதலில் சாப்பிடுபவர் வெற்றி பெறுவதாக அறிவிக்கப்பட்டு 3 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த போட்டியில் மொத்தமாக 170 பேர் கலந்து கொண்டனர். மணமணக்கும் பிரியாணியை சாப்பிட தயாராகினர்.

உற்சாகம்
மேலும் 25க்கும் மேற்பட்ட பெண்களும் பள்ளி கல்லூரி மாணவிகளும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் 2 கிலோ பிரியாணியுடன் தயிர் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது. போட்டி ஆரம்பித்த முதல் பத்து நிமிடத்தில் 5 க்கும் மேற்பட்டவர்கள் வேகமாக சாப்பிட்டனர்.

2 கிலோ பிரியாணி
எப்படியும் ஜெயித்து விடலாம் என போட்டியாளர்கள் கபகபவென பிரியாணியை துவம்சம் செய்து வெற்றிக்கோட்டை நெருங்கிக்கொண்டிருந்த வேளையில் எவரும் எதிர்பாராத விதமாக பாபு என்ற இளைஞர் 18.18 நிமிடங்களில் 2 கிலோ பிரியாணியை முழுமையாக சாப்பிட்டு இருக்கையை விட்டு எழுந்தார்.

3 ஆயிரம் பரிசு
இதனைக்கண்ட மற்ற போட்டியாளர்கள் அத்துடன் சாப்பிடுவதை நிறுத்தி மிகுதியாக இருந்த பிரியாணியை பக்கெட்டில் வீட்டுக்கு எடுத்துச்சென்றனர். இதில் வெற்றி பாபு என்பவருக்கு வைரகிரீடம் அரிசிமண்டி நிறுவனர் 3 ஆயிரம் பரிசுத் தொகையினை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வைரகிரீடம் ராஜா மற்றும் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications