குறுக்கே வந்த தெருநாய்! இடறி விழுந்த பைக்! பின்னால் வந்த கார்! நூலிழையில் உயிர் தப்பிய இருவர்!
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை குன்னத்தூர் சாலையில் தெருநாய்கள் குறுக்கே பாய்ந்த போது விபத்தில் சிக்கிய இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை குன்னத்தூர் சாலையில் கடந்த 20ஆம் தேதி காலை வாகனங்கள் எல்லாம் பரபரப்பாக சென்றுக் கொண்டிருந்தன. அப்போது அங்கு இருந்த இரு தெருநாய்கள் திடீரென சண்டையிட்டுக் கொண்டன.

இதனால் அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தின் குறுக்கே நாய்கள் சென்றதால் அந்த பைக் உடனே பிரேக் பிடித்த போது திடீரென நிலைத்தடுமாறி விழுந்தது. அப்போது எதிர்பாராத விதமாக வந்த கார், அவர்களது பைக்கில் இடித்ததில் பைக் சற்று தொலைவு தள்ளப்பட்டது. பின்னாடியே வந்த கல்லூரி பேருந்து அந்த காரின் பின்னால் மிகவும் நெருக்கமாக நிற்கும் படியாக பிரேக்கை பிடித்தது.
கார் இடித்த போது பைக்கில் இருந்து விழுந்த இருவரும் அப்படியே நகர்ந்து சாலையோரத்தில் வந்துவிட்டனர். அதாவது நூலிழையில் உயிர் தப்பினர். பின்னர் அங்கிருந்தவர்கள் ஓடி வந்து கீழே விழுந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறதா என பார்த்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியது.
ஜஸ்ட் மிஸ் என்பார்களே அது போல் அந்த இரு வாகன ஓட்டிகளும் சுதாரிக்காமல் இருந்திருந்தால் கார் அவர்கள் மீது ஏறி இறங்கியிருக்கும். இதை சிசிடிவி காட்சிகளை பார்த்தாலே தெரிகிறது.
தெருநாய்கள் நிறைய இடங்களில் இப்படி சண்டையிட்டுக் கொண்டு சாலையில் ஓடுகின்றன. அப்போது வாகனத்தில் அடிபட்டு அந்த நாய்களும் இறக்கும் நிலை ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படுகிறது.
பெரும்பாலும் இவ்வாறு குறுக்கே செல்லும் நாய்கள் தப்பிச் சென்றுவிடுகின்றன. ஆனால் மனிதர்கள்தான் இந்த விபத்தில் சிக்கி சின்னாபின்னமாகிறார்கள். ஒரு பக்கம் தெரு நாய்கள் பெரியவர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரையும் கடித்து குதறும் பகீர் சம்பவம் நடந்தாலும் மறுபுறம் இப்படி இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு குறுக்கே ஓடி அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
ஒவ்வொரு சாலைக்கும் 10 நாய்கள் இருக்கின்றன. இவற்றுக்குள் ஏரியா தகராறும் நடக்கிறது. இந்த ஏரியா தகராறில்தான் மற்ற நாய்கள் வேறு நாயை துரத்தும் போது இரு சக்கர வாகனங்களின் குறுக்கே ஓடி விபத்தை ஏற்படுத்தி விடுகின்றன.
எனவே நாய்கடிகளால் அதிகமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை ஒரே இடத்தில் வைத்து பராமரிப்பது குறித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதை விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்த்துள்ளனர். இது தொடர்பாக நீயா நானாவில் விவாதமே நடந்தது.












Click it and Unblock the Notifications